ஜப்பானில் பெண்களுக்கு காதலர்களை வாடகைக்கு வழங்கும் வர்த்தகம் களை கட்டியுள்ளது. அங்கு பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய சேவையை வழங்கி வருகின்றன. காதலர் இல்லாத பெண்கள், சமூக நிகழ்வுகளிலும் ஏனைய வைபவங்களிலும் தம்முடன் அழைத்துச்செல்வதற்கு இளைஞர்களை வாடகைக்கு பெறுகின்றனராம்.
அந்த இளைஞர்களின் அழகு, சேவைக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பிரெஸ், ரெகுலர், ஸ்பெஷல் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முறையே சுமார் 5,000, 6,000, 7,300 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.
இந்த தற்காலிக காதலர்களை வாடகைக்குப் பெறுபவர்கள் அவர்களை முத்தமிடவோ, பாலியல் உறவு வைத்துக்கொள்ளவோ அனுமதிக்கப்படுவதில்லை. கரம் கோர்த்துக்கொள்வது மாத்திரமே வாடகைக் காதலருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் அனுமதிக்கப்படும் ஒரேயொரு உடல்ரீதியான தொடர்பாகும்.
6 மணித்தியாலங்களுக்கு காதலர்களை வாடகைக்குப் பெறும் பெண்கள், அந்த இளைஞர்களை ஷொப்பிங், கரோக்கே போன்றவற்றுக்கும் அழைத்துச் செல்லலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.