நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான 'மேகி நூடுல்ஸ்', இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விருப்ப உணவாக உள்ளது. இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த நூடுல்ஷில் மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் அளவுக்கு அதிகமாக சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் எடுக்கப்பட்ட நூடுல்ஸ் மாதிரியில் இருந்து இது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச சந்தைகளில் இருந்து இந்த நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து உத்தரகாண்ட், டெல்லி, கேரளா, குஜராத், காஷ்மீர் ஆகிய மநிலங்களிலும் மேகி நூடுல்ஸை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழத்திலும் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். ரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அளவுக்கதிமாக இருந்ததால் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடைகளில் உள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெறவும் உற்பத்தி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.