மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


தேசிய அரசை கலைப்பதே சிறந்த விடயம்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!.

20ஆவது திருத்தம் நிறைவேறும்வரை ஆட்சியை எம்மிடம் ஒப்படைக்கவும்! - ஜனாதிபதிடம் ஐ.ம.சு.மு.கோரிக்கை!

உரிய முறையில் செயற்படாத அரசாங்கத்தினால் பயனில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக அதனை கலைப்பதே சிறந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிடிகல - ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் நேற்று இடம் பெற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர், கூடியிருந்த மக்கள்  உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட வரைபை நிறைவேற்றிக்கொள்ளும்வரை எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமித்து ஆட்சியை தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே டலஸ் அழகப்பெரும எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு.

20ஆவது திருத்தச்சட்ட வரைபுக்கு ஐக்கிய தேசியக் கட்சி விரும்பமில்லை என்பதாலேயே, 19ஐயும், 20ஐயும் ஒன்றாகக் கொண்டுவருமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். 19 நிறைவேறிய பின்னர், 20ஐ நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் நழுவிச்செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கிறது. 

தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கும் மூன்று மாதகால அவகாசம் தேவை எனத் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தகுதியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவருக்கோ பிரதமர் பதவியை வழங்கி, ஆட்சியை எமக்குப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் எம்மிடமே இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்' - என்றார். இதன்போது கருத்துவெளியிட்ட ஜி.எல்.பீரிஸ் எம்.பி. - பெரும்பான்மைப் பலத்தை வைத்துக்கொண்டு எம்மால் சும்மா இருக்கமுடியாது. எமது பலத்தை இனிமேல் காட்டுவோம். தேசிய அரசு விடயம் இனிமேல் எடுபடாது என்றார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.