மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


உலகின் அதிசிறந்த விமான சேவை நிறுவனமாக 'கத்தார் ஏர்லைன்ஸ்' தெரிவு.

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக "கத்தார் ஏர்லைன்ஸ்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று பாரிஸ் விமான கண்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருது அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

"ஸ்கைடிராக்ஸ்' ( Skytrax )எனப்படும் விமான போக்குவரத்து நுகர்வோர் இணையதளம் ஒவ்வொரு ஆண்டும், உலகின் 110 நாடுகளில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட விமானப் பயணிகளிடம் சிறந்த விமான சேவை நிறுவனம் பற்றிய கருத்துக் கணிப்பை நடத்துகிறது.

பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, பானங்களின் தரம், கனிவான சேவை, நல்ல வசதிகளுடன் கூடிய இருக்கைகள், அழகான தோற்றத்துடன் கூடிய கேபின்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுமிக அதிக அளவில் பயணிகளை கவர்ந்த விமான சேவை நிறுவனமாக "கத்தார்' அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 மற்றும் 12 ல் "ஸ்கைடிராக்ஸ்' நடத்திய கருத்துக் கணிப்பில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்ற வருடம் நடந்த கருத்துக்கணிப்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதல் இடத்தை பிடித்தது.

கத்தார் விமான சேவை நிறுவனத்துக்கு அடுத்து சிங்கப்பூர், துருக்கி, ஏ.என்.ஏ, காதே பசிபிக், எமிராட்ஸ், எடிகாட், கான்டஸ், கருடாஸ், இந்தோனேஷ்யா, இ.வி.ஏ ஏர் போன்றவை டாப் டென் விமான சேவை நிறுவனங்களை "ஸ்கைடிராக்ஸ்' தேர்வு செய்தது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.