நாட்டுக்காகவும், எம் மக்களுக்காகவும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இந்த சவால்களை எதிர்கொள்ளவே தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியதாகவும் எந்த சவாலாக இருந்தாலும் தளராமல் அதனை எதிர்கொள்ளும் பலம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரநாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை தவிர சமூகத்திற்கு பாரிய அனர்த்தமாக மாறியுள்ள போதைப் பொருள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் அடுத்த சில வாரங்களில் அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.