மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் இன்று பிற்பகல் நடாத்தப்படவிருந்த மாகாணமட்ட பரீட்சை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் 2015 ஆண்டுக்கான கணித வினாவிடை போட்டி 20.08.2015 வியாழக்கிமை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததுதுடன் அதற்காக முற்பகல் 12.00மணிக்கு முன்பாக சமூகம் தருமாறு பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரிக்கு முற்பகல் 12.00மணிக்கு முன்பாக வருகைதந்து தமது வருகையினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தவேளையில் பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர்கள் அழைக்கப்பட்டு பரீட்சை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சை நடப்பதாக பெற்றோர் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் பிற்பகல் 1.30மணி வரை பரீட்சை நடாத்தப்படாததை அறிந்த பெற்றோர் அது தொடர்பில் பரீட்சை அதிகாரிகளிடம் கோரியபோது பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் வரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளை சந்திப்பதற்காக பெற்றோர் வளாகத்திற்குள் முயற்சித்தபோதிம் உரிய அதிகாரிகள் வெளியில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிற்பகல் 4.00 மணி வரை பரீட்சை நடைபெறாத நிலையில் பெற்றோர் கடும் விசனத்தினை தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.