மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


ஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு காத்தான்குடியில் பலத்த எதிர்ப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்க கூடாது என்று நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மைத்திரிபால சிறிசேனா அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக பல போராட்டங்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து எங்களது ஆதரவை வழங்கி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினோம். அந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று செயற்பட்டவர்கள். தங்களுடைய அந்த செயற்பாடு பலன்தராத நிலையில்; தற்போது நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். நல்லாட்சியினூடாக பாராளுமன்றம் அமைய வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நல்லாட்சிக்கு விரோதமாக இருந்தவர்களை மக்கள் ஜனநாயக ரீதியாக தோற்கடித்தார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பிறகு மக்களை ஏறமாற்றும் விதமாக ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் விரும்புகின்ற மக்களை மேலும் ஏமாற்றமடையச் செய்யும் விதத்தில் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலுக்காக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை நாங்கள் பார்க்கின்றோம். அவரின் பெயர் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளே காத்தான்குடியிலும் அதனைச்சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களிலும் மிக மோசமான அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த சகோதரர்கள் ஆதரவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. கடைகள் தாக்கப்பட்டுள்ளன. காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளன. தாறுள் அதர் அத்தவிய்யா பள்ளிவாயல் முற்றுகையிடப்பட்டு அங்கு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளார்கள்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடைய நான்கு மாதக்கர்ப்பிணியை அடித்து தாக்கியுள்ளனர்.
இதைப்பார்க்கின்ற போது நல்லாட்சிக்காக பாடுபட்ட எங்கள் மீது நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அராஜகம் புரியுங்கள் என தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஒரு தெளிவான முடிவினை எடுக்க வேண்டும். உடனடியாக ஹிஸ்புல்லாஹ்வை தேசியப் பட்டியலில் இருந்து நீக்குவதன் ஊடாக ஜனநாயகத்தை வாழ வைத்தவர், நல்லாட்சியை உருவாக்கியவர் என்ற பெருமையை ஜனாதிபதி மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம். நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை கொடுப்பதுதை கண்டிக்கின்றோம். இது நல்லாட்சிக்கு எதிரான செயலாகும்.

ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.




Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.