ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று அக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முகாமையார் வி .கே .லிங்கராஜா தலைமையில் கட்சியின் வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று நண்பகல் மட்டக்களப்பு தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பிட முன்பாக மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியினை தெரிவித்துகொண்டனர் .
இந்நிகழ்வில் போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான பட்டிருப்பு ஐக்கிய தேசிய கட்சியின் இணைப்பாளர் தி .சத்தியசீலன் , வாழைச்சேனை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எம் பி .எஸ் .சபீக்கா, மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முகாமையாளர் வி .கே .லிங்கராஜா ,களுதாவளை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் த. திஸ்ஸவீரசிங்கம், ஓட்டமாவடி பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எல் .டி .எம் .புர்க்கான் ஆகியோர் கலந்துகொண்டனர் .
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.