அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வால் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது இந்த சந்திப்பின் போது, கடந்த பொதுத்தேர்தல் அமைதியாகவும், நியாயமானதாகவும் இடம்பெறுவதற்கு வழிவகுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த நிஷா பிஷ்வால். ஜனநாயகம், அமைதி மற்றும் வாழ்வாதார மேம்பாடு மற்றும் இலங்கையினுள் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி பணிகள் மற்றும் நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து துறைகளிலும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் உறுதியளித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி அமெரிக்காவுடன் மிகவும் சுமூகமான முறையில் செயற்படுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.
நேற்று காலை இலங்கை வந்த நிஷா பீஸ்வால் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் பின்னர், இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நிஷா பீஸ்வால் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் அமெரிக்கா பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, சம்பூரில் மீள்குடியேற்றத்திற்கும் கல்விக்குமாக அமெரிக்கா ஒரு மில்லியன் டொலர்கள் பெறுமதியான மூலவளங்களை வழங்குவதாக நிஷா பீஸ்வால் உறுதியளித்துள்ளார். சாம்பூரில் இரண்டு பாடசாலைகளும் இதன்போது அமைக்கப்படவுள்ளது. இந்தநிலையில், எதிர்காலத்தில் ஜனாதிபதி, பிரதம மந்திரி உட்பட்டவர்கள் ஊடாக தமது திட்டங்களை முன்னெடுத்து செல்ல போவதாகவும் பீஸ்வால் தெரிவித்தார்.
தமது விஜயத்தின் போது, இலங்கையின் சிரேஷ்ட தலைவர்கள், குடியியல் சமூக தலைவர்கள் மற்றும் தனியார் துறையினரை சந்தித்து பேசவுள்ளதாகவும் பீஸ்வால குறிப்பிட்டுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.