மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல் அனைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும் கருணா அம்மான்.

அன்பான தமிழ்மக்களே இந்தமுறை நடைபெறும் தேர்தல் தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும் எங்களுடைய உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது இதில் நாம் சுயநலத்தை பாராமல் பொதுவாக சிந்திக்க வேண்டும் குறிப்பாக மட்டக்களப்பு மக்களாகிய நாம் விழிப்பாக இருக்கவேண்டும் கடந்த பத்து வருடங்களாக என்னை அர்ப்பணித்து உங்களுக்காக பணியாற்றியுள்ளேன்.

 குறிப்பாக மின்சாரதேவை கணிசமாக பூர்த்தியடைந்துள்ளது,கல்வியில் பாரிய அபிவிருத்தி கண்டிருக்கின்றோம்,சுகாதாரம் மேம்பட்டிருக்கின்றது இயன்றளவு வீடுகள் கட்டியிருக்கின்றோம் மலசலகூடம் கட்டியிருக்கின்றோம்  குடிதண்ணீர்திட்டம் வழங்கியிருக்கின்றோம், விவசாயமேம்பாடு, குளங்கள்அபிவிருத்தியென்று பலதிட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றோம்

 இதைவிடமேலாக உங்களுக்கு நிரந்தமான அமைதியை ஏற்படுத்தித்தந்துள்ளேன். அதோடு இல்லாமல் இயற்கை அனர்த்தங்கள் வருகின்றபோது உங்களோடு இரவு பகலாக உழைத்திருக்கின்றேன்
என்மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும் அன்பும் வைத்துள்ளீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும் அதனால்தான் நான் உரிமைகளோடு கேட்டுக்கொள்கின்றேன் மட்டக்களப்பு மக்களாகிய நாங்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல் அனைவரும் சென்று தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும் என்பதை அன்பாக கேட்டுக்கொள்கின்றேன் அதுமாத்திரமில்லை புதிய உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி,

கருணா அம்மான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.