இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையில் இலங்கை வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் சுய தொழில் கடன் திட்டத்தின் இணைத்துக் கொண்ட கிராம குழுக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் ஒன்றுகூடல் மண்டபத்தில் மட்டக்களப்பு இலங்கை வங்கி சிரேஷ்ட முகாமையாளர் எம் .ஐ . நவ்பீல் தலைமையில் இடம்பெற்றது .
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு கடன் திட்ட குழு தலைவர் .ஆர் ,ஸ்ரீ பத்மநாதன் ,மட்டக்களப்பு இலங்கை வங்கி சிரேஷ்ட முகாமையாளர் எம் .ஐ . நவ்பீல் , வங்கி வெளிக்கள உத்தியோகத்தர் பி .ஜெயரஞ்சனி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் மட்டக்களப்பு இலங்கை வங்கியின் நிதி உதவியுடன் கிராமங்களில் இயங்கும் வருகின்ற வாழ்வாதார குழு அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இடம்பெற்ற வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கில் வளவாளர்களாக திருமதி .ரமேஷ்கரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சுயதொழில் முயற்சியாளர்களிடையே சுய தொழில் தொடர்பான விளக்கங்களும் மற்றும் வறுமை ஒழிப்பு, சேமிப்பு தொடர்பான செயல் முறைகளும் விளக்கங்களும் வழங்கப்பட்டது.
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.