“ நினைவுகள் விருட்சம் “ குழு ஏற்பாட்டில் கிராம சமூக செயல்பாட்டாளர் எஸ் .அரியமலர் வழிகாட்டலுக்கு அமைவாக லண்டன் சமூக சேவையாளர் வேலப்பன் முரளிதரனின் நிதி உதவியுடன் கடந்த கால இனக்கலவரத்தினால் பிரிவுற்ற மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஏறாவூர் 01 மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடனும் மற்றும் இறந்த உறவுகள் நினைவு கூறும் முகமாக வருடந்தோறும் நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றான மரக்கன்று நாட்டும் நிகழ்வு இன்று ஆறுமுகத்தான் குடியிருப்பு மாரியம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற நிகழ்வில் இக்கிராமத்தில் இறந்த உறவுகளுக்காக 75 மரக்கன்றுகளும் , தளவாய் சவுக்கடி கிராமத்தில் 90 ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட உறவுகளுக்காக 31 மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .ஸ்ரீநேசன் , ஆறுமுகத்தான் கிராம அபிவிருத்தி குழு தலைவர் எஸ் .நவச்சிவாயம் ,மாரியம்மன் ஆலய நிருவாக சபை தலைவர் குணசேகரம் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.