நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இயங்கும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு -222 மத்தியஸ்தர் குழாம் ஒழுங்கு செய்துள்ள வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் , சிறப்பு மலர் வெளியீடும் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் தலைவர் எஸ் .விஷ்ணுமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது .
இங்கு உரை ஆற்றிய மண்முனை வடக்கு மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். விஸ்ணுமூர்த்தி நீதி மன்றம், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றிலிருந்து ஆற்றப்படும் பிணக்குகள், நிதி நிறுவனங்கள், பொது மக்கள்;, ஆலய, கிராம அபிவிருத்தி சங்கங்கள் பிணக்குகளை முன்வைக்கின்றனர்.
எமது சபை 2013 இல் 478 பிணக்குகளோடு பாரமெடுத்த நிலையில் இற்றைவரையில் கிடைக்கப்பெற்ற 2774 பிணக்குகளில் 80 சதவீதமான பிணக்குகளுக்கு இணக்கப்பாட்டுடனான தீர்வு பெறப்பட்டுள்ளன.
1988 ஆம் ஆண்டு இலங்கையில் மொத்தம் 329 மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்ட நிலையில் 328 மாத்திரமே இயங்குகின்றன. எமது சபையில் தற்போது 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 31 பேர் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளார்கள் என்றார்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் , வங்கி ,தொலை தொடர்பு ,சிங்கர் நிறுவன உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் ,கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.