கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அனுசரணையில் மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம் ஏற்பாட்டில் அகில இலங்கை 2015 ஆண்டுக்கான தமிழ்மொழித் தின போட்டி நிகழ்வுகள் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு நடாத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இந்த நிகழ்வு இன்று காலை ஆரம்பமானது.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை முன்றலில் இருந்து கல்வி திணைக்கள அதிகாரிகள்,வலய கல்வி அலுவலக அதிகாரிகள் , மத தலைவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோரை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் அதிதிகளை வரவேற்க்கும் நிகழ்வுகளும் சமய கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து விவேகானந்தா மகளீர் வித்தியாலயத்தில் போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்வி திணைக்கள அதிகாரிகள் ,வலய கல்வி அலுவலக அதிகாரிகள் , மத தலைவர்கள் ,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.