இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளால் கனடாவில் இயங்கும் முன்னணி அமைப்பான உலக தமிழர் இயக்க செயற்பாடுகளுக்காக அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நாடு கடத்தும் உத்தரவை கனேடிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கனேடிய செய்தித்தாள் ஒன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. கனேடிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் சுரேஸ் என்பவரையே நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவரை நாடு கடத்த 1995ஆம் ஆண்டில் முதல் தடவையாக கைதுசெய்யப்பட்ட நாளில் இருந்து கனேடிய அரசாங்கம் முயற்சித்து வந்தது. இந்தநிலையில் செப்டம்பர் 17ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மீள்மனுவின் அடிப்படையில் சுரேஸ் கனடாவில் வசிக்க அனுமதிக்கமுடியாது என்று பிராந்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அவர் பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர் என்ற வகையில் நாடு கடத்தப்படவேண்டியர்களுக்குள் உட்படுத்தப்படடுள்ளார்.
இதனையடுத்து ஒக்டோபர் 5ஆம் திகதியன்று சுரேஸ் மாணிக்கவாசகம் குடிவரவு மற்றும் ஏதிலிகள் சபையின் தீர்மானத்தை மாற்றயமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதில், சுரேஸ் மாணிக்கவாசகத்தை பயங்கரவாதத்துக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்கு பதிலாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கண்டுள்ளமை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுரேஸ் மாணிக்கவாசகத்தின் நாடு கடத்தல் உத்தரவை, கனேடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் சபை உறுதிசெய்யவில்லை.
சுரேஸின் எதிர்மனு தொடர்பில் தமது சபையின் விளக்கம் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இருப்பினும் நாடு கடத்தலுக்கு அனுமதி கிடைத்தமை தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை என்று சபையின் பேச்சாளர் அனா பாப் தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டின்படி சுரேஸினால் முன்னெடுத்துச்செல்லப்பட்ட உலக தமிழர் இயக்கம், விடுதலைப்புலிகளுக்காக குறிப்பிடத்தக்க நிதியை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.