மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


ஊடகவியலாளர்களுக்கு இடையில் பரந்தளவில் கலந்துரையாடலை ஏற்படுத்தும் மூன்று நாள் கருத்தரங்கு நீர்கொழும்பில்.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் சகவாழ்வினை மேம்படுத்துவதற்காக இளைஞர் ஊடகவியலாளர்களுக்கிடையில் பரந்தளவில் கலந்துரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மூன்று நாள் கருத்தரங்கு  இம்மாதம் 24ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை இலக்கம் 345,லெவிஸ் பிளேஸ் நீர்கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள கெமலோட் பீஷ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

மேற்படி கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேஷன் , பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாத்திலக ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் சமூக ஒருமைபாட்டினை இனம் காணுதல்,கருத்துச் சுதந்திரம்,பிந்துணுவௌ ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தல் மற்றும் கலந்துரையாடல்,தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமை ,ஊடக அறிக்கையிடலின் பொறுப்பு,பால்நிலை சமத்துவத்தினை அறிந்துகொள்ளுதல் மற்றும் அதன் உணர்திறன் ஊடகப் பாவனை அறிக்கையிடல்,பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மற்றும் அதன் உணர்திறன் ஊடக அறிக்கையிடல்,சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான ஊடக கையாளுமை சம்மந்தமான ஆய்வுத் தகவல்களை வழங்குதல்,ஊடகவியலாளர்களின் முன்னிலைப்படுத்துகை மற்றும் நிபுணத்துவக் குழுவின் கருத்துக்கள் மற்றும் மதிப்பீடு போன்ற தலைப்புக்களில் பேராசிரியர்கள்,சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்,ஊடக ஆலோசகர்கள் ஆகியோரினால்  கருத்துரை வழங்கப்படவுள்ளது.

குறித்த கருத்தரங்கிற்கு இலங்கையின் பல மாவட்டங்களிலும் இருந்து தமிழ்,சிங்கள,முஸ்லிம் இளம் ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் திட்டமிடல் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.