ஜெனீவா பிரேரனை மூலம் நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்பட்டதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன முற்றாக நிராகரித்துள்ளார். இந்த பிரேரனையின் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்லும் செயற்பாடு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதனை மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நிறைவேற்றியிருக்குமாக இருந்தால் தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்காது. இந்தநிலையில், ஜெனீவா யோசனைக்கு ஒரு பக்கத்தில் தயான் ஜயதிலக்கவும், மறுபக்கத்தில் விடுதலைப்புலிகளும் எதிராக உள்ளனர்.
ஒரு பக்கத்தில் விமல் வீரவங்சவும், மறுபக்கத்தில் விடுதலைப்புலிகளும் எதிராகவுள்ளனர்.
ஒரு பக்கத்தில் கம்மன்பிலவும், மறுபக்கத்தில் விடுதலைப்புலிகளும் எதிராக இருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.