மட்டக்களப்பு மாவட்ட கால்பந்து விளையாட்டு சங்கம் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பாடசாலை மட்டத்திலிருந்து கால்பந்தாட்டத்தை மாணவர்களுக்கிடையில் வளர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட ச் சங்கமும் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள 15 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப விழா மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 03.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இதன் ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் .கே .பாஸ்கரன் , உடல்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் வி .லவக்குமார் , மட்டக்களப்பு மாவட்ட கால்பந்து சம்மேளன தலைவர் எஸ் .உதயராஜ் , மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இதன் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் . அதனை தொடர்ந்து தேசிய,மாகாண மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு , தேசிய மற்றும் பாடசாலை கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் போட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இதன் ஆரம்ப போட்டியாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணியினருக்கும் , கல்லடி விபுலானந்தா வித்தியாலய அணியினருக்கும் இடையில் போட்டி இடம்பெற்றது .
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.