மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின திறந்து வைத்தார்.
250 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலையில் ஒரேநேரத்தில் 72 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான விடுதி வசதி,வெளிநோயாளர் பிரிவில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி, மாதாந்த கிளினிக் நடத்துவதற்கான வசதி ஆகிவை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.
இதேவேளை, 67 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான நிர்வாகக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டதுடன், இவ்வைத்தியசாலைக்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுக்கான கட்டட நிர்மாணத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் வைத்தியசாலை பணிப்பாளரினால் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.இப்றாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம், மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்;எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.