இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகளுடன் நாளை (17) விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை கடற்றொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நாளை கடற்றொழில் அமைச்சுக்கு வருகை தருவார்கள் என்றும் இதன்போது இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்துவர்கள் என்றும் அறியமுடிகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் 90 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.