மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எம் நாட்டின் பெரும் தலைவர்களால் விடுக்கப்படும் வாழ்த்து செய்திகள்.

உலகின் பல பாகங்களிலும் வாழ்வின் இருள் நீக்கி ஒளி ஏற்ற கொண்டாட படும் பண்டிகையாம்  தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எம் நாட்டின் பெரும் தலைவர்களால் விடுக்கப்படும் வாழ்த்து செய்திகள்.

அதிமேதகு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி.

உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தீபாவளித்திருநாள் உலகிலிருந்து தீயசெயல்களைப் போக்கி நற்செயல்களை நிலைநாட்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளமையால் ஏனைய உலக மக்களுக்கும் இத்திருநாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்படுகிறது.

உலகை சிறந்ததோர் இடமாக மாற்றுவதற்கு மனித நாகரீகத்தின் ஆரம்பகால யுகங்களிலிலும் மனிதனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மை தற்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடியதாயுள்ளது.

ஒளிவிளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது இருளை அகற்றுவதைப் போன்று தீபாவளியின் தீபவொளி அனைத்து மனித மனங்களிலும் ஒளிவீசுவதன் காரணமாக அவர்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும் ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் உலகின் அனைத்து நாகரீகங்களுக்கும் உரித்தான மனிதர்களின் பொதுவான பிரார்த்தனையாக மாற்றமடைகின்றது.

அது பேதங்கள் எதுவுமற்ற ஐக்கியம் அரசாட்சிசெலுத்தும் இவ்வுலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனை என்பதை மிகவும் பிரகாசமான விளக்கொளி பூஜையின் மூலம் எமக்கு வழியுறுத்துகிறது.

இவ்வாறான நற்செயல்களை நோக்கமாகக் கொண்ட பொதுவான பழக்கவழக்கங்களினூடாகவே மானிடப் பரிணாம வளர்ச்சியானது பயனுறுதிவாய்ந்ததாக இன்றுவரை வியாபித்துள்ளது. இவ்வாறு அனைத்து காலங்களுக்கும் பொருந்துகின்ற தீபாவளி போன்ற விழாக்கள் ஆன்மீக வழிபாட்டுப் பழக்க வழக்கங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன் காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும்.

இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் “இதயபூர்வமான பக்திப்பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை” மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன்.

மைத்ரிபால சிறிசேன.

கெளரவ பிரதமரின் வாழ்த்து செய்தி.

தீமை தோற்கடிக்கப்பட்டு நன்மை வெற்றி பெறுவதனை அடையாளப்படுத்தி உலகவாழ் இந்து பக்தர்கள் தீபங்களை ஏற்றி இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களுக்கு தீங்கிழைத்த நரகாசுரன் எனும் கொடிய அரக்கனைத் தோற்கடித்த தினத்தையும் இளவரசன் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோதிக்கு வருகை தந்த தினத்தையும் விசேடமாக தீபாவளித் தினம் நினைவுபடுத்துகின்றது. இந்த அனைத்து தெய்வீகக் கதைகள், பழக்க வழக்கங்களிலிருந்தும் மனிதர்களிடம் காணப்படும் தீய எண்ணங்களை விட்டொழித்து நன்மையெனும் ஒளியை ஏற்ற வேண்டும் என்பதையே எமக்கு வலியுறுத்துகின்றது.

கடவுள் மீது கொண்ட தீராத பக்தியுடன் தீபாவளி தினத்தில் மேற்கொள்ளப்படும் சமயக் கிரியைகள் ஊடாக தன்னுள் குடிகொண்டிருக்கும் மமதை, பேராசை, பொறாமை போன்ற தீய குணங்கள் கலைந்து நற்பயனை அடைந்துகொள்ள முடியுமென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதற்கமைய இது இந்துக்களுக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியை எடுத்தியம்பும் சமயப் பண்டிகை என்பதில் விவாதத்திற்கு இடமில்லை.

இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன, மத பேதங்களை மறந்து சாதானமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு மனதில் உறுதி பூணுவதுடன் எமது உள்ளங்களை மனித நேயத்தினைக்கொண்டு ஒளியேற்றுவோம். அப்போதுதான் தீபாவளிப் பண்டிகை அர்த்தமிக்கதாக அமையும்.

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்லாசிகள்....!

ரணில் விக்ரமசிங்க.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.