மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


நாடு தழுவிய தபால் சேவை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில்.

14 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு (12) முதல் பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் கே.என்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதான தபால் நிலையம் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களிலுள்ள அனைத்து ஊழியர்களும் சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் கே.என்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.