பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மோசடிகள் தொடர்பான 1247 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த முறைப்பாடுகளில் சுமார் 200 முறைப்பாடுகளை விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 200 முறைப்பாடுகளிலும் 50 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் முற்றாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னம் மீது சுமத்தப்பட்ட பாரிய ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி விசாரணை குழு மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.