மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1

ஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு சென்று விறகு, சுள்ளிகளை எடுத்து வந்து விற்று, மிக சிரமப்பட்டு குழந்தையை வளர்த்து வந்தாள். ஒரே குழந்தை என்பதால், மிகவும் செல்லமாக வள்ர்த்தாள். பள்ளி செல்லும் வயது வந்ததும், பள்ளிக்கும் அனுப்பி வைத்தாள். இல்லையென்று சொல்லாமல், அவன் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தாள். அதனால் அவனுக்கு அம்மாவின் சிரமத்தை புரிந்துக்கொள்ளாமல் வளர்ந்து வந்தான். பள்ளியில் பிள்ளைகளிடமே பல்பம், பென்சில், ரப்பர் என சிறு சிறு பொருட்களை திருடிக்கொண்டு வந்து விடுவான். அதை அம்மாவிடம் காட்டுவான். அவன் அம்மாவும் செலவு குறைகிறதே என்ற எண்ணத்திலும், இப்பொலுதே அவன் சாமார்த்தியமாக இருக்கிறானே என நினைத்தும் பாராட்டுவாள்.
அவனும் அம்மாவிடம் பாராட்டு பெருகின்ற சந்தோசத்தில், மேலும் மேலும் அதிகமாக திருட ஆரம்பித்தான். அதனால் ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டு அடிக்கடி அடி வாங்க ஆரம்பித்தான். அடி பொருக்க முடியாததாலும், அம்மாவை பள்ளிக்கு அழைத்து வர சொன்னதாலும், பள்ளிக்கு செல்வதையே நிறுத்தி விட்டான். பள்ளிக்கு செல்லாதது அம்மாவுக்கு தெரியக்கூடாது என நினைத்து, தினமும் பையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று, சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வந்து விடுவான். இவன் பள்ளிக்கு வராததால், ஒரு நாள் ஆசிரியர் அம்மாவிடம் ஏன் உங்கள் மகன் பள்ளிக்கு வருவதில்லையென கேட்டபோதுதான், அவளுக்கு பள்ளி செல்லாதது தெரிந்தது. செல்லமாக வளர்த்த பிள்ளையென்பதால், அவனை அடிக்க மனமின்றி, பள்ளிக்கு போகச் சொல்லி, அவனை வற்புறுத்தினாள். ஆனால் அவனோ, அம்மாவுக்கு தான் தெரிந்து விட்டதே என்ற தைரியத்தில், பள்ளிக்கு செல்வதையே நிறுத்தி விட்டான்.இப்படி இவன் வெளியே சுற்றியதால், தீய நணபர்களின் பழக்கம் ஏற்ப்பட்டதைத் தொடர்ந்து, கடைகளில் திருடுவதும், மிரட்டி வழிபறி செய்வதும், கொள்ளையடிப்பதிலும் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட ஆரம்பித்தான். மாட்டிக் கொண்டபோது, அடிபட்டு உதைப் பட்டு காயங்களுடன் வீட்டுக்கு வருவான். அதை பார்க்கும் தாயோ, அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறியும் அவன் திருந்துவதாக இல்லை. அந்த கவலையிலேயே தாய் நோய்வாய் பட்டு இறக்கும் நிலையடைந்தாள். எப்படியாவது அவனை திருத்திவிட எந்த யோசனையும் தோன்றமல், தவித்த தாயோ, அவனை அருகில் அழைத்து, உனக்காக நான் எவ்வளவோ செய்தேன், ஆனால் என் விருப்பத்தை நிறைவேற்றவில்லை. எப்போதும் உண்மையே பேசுவேன் என்ற சத்தியமாவது செய்துக் கொடு, என்று கேட்டாள். அவனும் இதை செய், அதை செய்யக் கூடாது என்று எதுவும் சொல்லவில்லை. உண்மையைப் பேச சத்தியம் தானே கேட்கிறள், அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று நினைத்தவன், சிறுது நேரம் யோசனைக்கு பிறகு, அப்படியே சத்தியம் செய்துக் கொடுத்தான். அதை கேட்ட பிறகே நிம்மதியாக உயிரை விட்டாள்.பிறகு நடந்தத்கேன்ன ?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.