மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


** உண்மையின் உயர்வு -- பகுதி-2

அம்மா இறக்கும் போது வாலிப வயதை தொட்டிருந்தவனின் வாழ்க்கை, இப்பொழுது எப்படியிருகிறது என்று பார்போமா !. அவன் தொடர்ந்த்து முரடனாக தீயவன் ஆகவே வளர்ந்து வந்தான். ஆனால் அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறாமல் உண்மையை மட்டும் பேசினான். அதனால் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை, வழிபறி, திருடுகளில் ஈடுபட்டு மட்டிக் கொண்டால், உண்மையைப் பேசினான். அதனால் அவனுக்கும், அவன் நண்பர்களுக்கும் நன்றாக அடி உதை அடிக்கடி கிடைத்தது. இவனிடம் உண்மை பேச வேண்டாம், அது நம் செய்யும் திருட்டு வேலைக்கு ஒத்துவராது என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கேட்காததால், நண்பர்கள் இவனை விட்டு விலகி விட்டனர். இவனுக்கு வேறு தொழில் தெரியாததால் சாப்பாட்டுக்கே வழியின்றி, பட்டணம் ( நகரம் ) சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துக் கொண்டு, தனியாக புறப்பட்டு, நகரம் சென்றடைந்தன். நகரத்தில் பிரம்மாண்டமானா கட்டடங்களையும், கொட்டை கொத்தளங்களையும் கண்டு வியந்து நின்றான்.

அப்பொழுதுதான் அவன் மனத்தில், ஒரு திட்டம் உதயாமானது. மிகபெறிய வசதியானவர் வீட்டில் ஒரு முறை பெரும் செல்வத்தை ( பணத்தை ) கொள்ளையடித்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று, மீண்டும் கொள்ளை, திருடுகளில் ஈடுபடாமல் நிம்மதியாக வாழ வேண்டுமென கருதி, நகரத்திலுள்ள பெறிய வீடுகளை நோட்டமிட்டான். அதில் ஒரு பெறிய மாளிகையை குறிவைத்துக் கொண்டு, சுற்றி வந்தான். மாளிகையைச் சுற்றி பெறிய மதில் சுவர் இருந்ததால், ஏறுவதற்கு வசதியாக, காட்டிற்கு சென்று ஒரு பெறிய உடும்பை ( பல்லி போன்ற காட்டில் வாழும் ஒரு உயிரினம். சரியான பிடி கிடைத்து பிடித்துக் கொண்டு விட்டால், அதை தனியாக அகற்றுவது மிக கடினம். )பிடித்துகொண்டு வந்தான். சுவரில் ஏறுவதற்கு வசதியாக ஒரு பெறிய கயிறையும் செய்து, ஒரு முனையை உடும்பின் இடுப்பில் கட்டி தயார் நிலையில், இரவுக்காக காத்திருந்தான்.
இரவு வந்தது, அனைவரும் உண்டு உறங்கினர்.இவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான். காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களும், ஒருவரை அடுத்து ஒருவர் தூக்க கலக்கத்தில் சொக்க ஆரம்பித்தனர். சரியான நேரம் வந்ததும் உடும்பை கைற்றுடன் சுழற்றி கோட்டை சுவர் மேல் தூக்கி விசிறிப் போட்டான். உடும்பு கோட்டை சுவற்றின் உட்புறம் நன்றாகா பிடித்துக் கொண்டுவிட்டதா என்று இழுத்துசோதித்து விட்டு, கைற்றைப் பிடித்து மெதுவாக சத்தமி ல்லாமல் மேலே ஏற ஆரம்பித்தான். இரண்டுமூன்று அடிகள் சுவற்றில் ஏறியபிற்கு, சட்டை எங்கோ மாட்டிக் கொண்டு கீழே இழுப்பதைப் போல் உணர்ந்தான். மாட்டியிருக்கும் சட்டையை விடுவித்துக் கொள்ளலாம் என நினைத்து, பின் பக்கம் முகத்தை திருப்பி கீழே பார்த்தான். அப்போழுதுதான் தெரிந்தது, கீழே முதியவர் நின்றுக் கொண்டு, அவன் சட்டையை பிடித்து இழுப்பதை. ஐயோ....!!!! மிண்டும் மாட்டிக் கொண்டு விட்டோமே என நினைத்துக் கொண்டே, கீழே இறங்கினான். அவனை உற்று நோக்கிய கிழவரோ, என்னப்பா செய்கிறாய் என கேட்க அவனும் திருட செல்வதாய் கூறினான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.