மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


** உண்மையின் உயர்வு -- பகுதி - 3

தந்தையின்றி, பாசம் மிகுந்த ஏழை தாயினால் வளர்க்கப் பட்ட திருட்டு சிறுவனான இவன் இன்றும் திருட்டு வாலிபனாக, ஆனால் தாயிக்கு கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு நடந்துவருகின்றவன், மீண்டும் மாட்டிக் கொண்டான் முகமறியா ஒரு கிழவனிடம்.
இவனோ அந்த கிழவனிடமிருந்து தப்பிச் செல்ல சட்டையை உருவிக் கொண்டு மேலே ஏற முயற்சி செய்ய, கிழவரோ அவனை கீழே இழுக்க, அவரின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் கீழே இறங்கினான். கிழவர் இங்கே என்ன செய்கிறாயென கேட்க, திருட செல்கிறேனென உண்மையைக் கூறினான். அதற்கு கிழவர், இவ்வளவு பெறிய மாளிகையில் பணம் எங்கே வைத்திருப்பார்களென தெரியுமா ? என கேட்க, அவனோ தெரியாதென கூறினான். தெரியாமல் திருடச் சென்றால் மாட்டிக் கொள்வாயே என்று கூறி, என்ன செய்ய போகிறாய்? என கேட்டார். அப்பொழுது தான் அதை உணர்ந்தவன் திருதிருவென முழித்தான்.
பிறகு கிழவரே பேசினார். நானும் ஒரு காலத்தில் திருடன் தான். வயதாகிவிட்டதால், திருட செல்லமுடியாமல், உணவுக்கும் வழியின்றி சிரமப்படுகிறேனென கூறி விட்டு, இந்த மாளிகையில் பணம் வைத்திருக்கும் இடம் எனக்கு தெரியும், நீ திருடி வருவதில் பாதி எனக்கு கொடுப்பதாக இருந்தால் வழி சொல்லுகிறேன் என்றார். அவனும் சரியென்றான். நானோ கிழவன், வழியை
தெரிந்துக் கொண்டு திருடியதில் பங்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டால், நான் என்ன செய்யமுடியுமென சந்தேகம் கேட்டார். அதற்கு அவனோ, நான் திருடனாய் இருந்தாலும் பொய் பேசமாட்டேன் என சத்தியம் செய்துக் கொடுத்தான். என்ன திருடிக் கொண்டு வரப்போகிறாயென கிழவர் கேட்டார். அதற்கு அவனும் கிடைக்கும் வெள்ளி சாமாங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை மூட்டைக் கட்டி திருடி வருகிறேனேன கூறினான்.
ஒன்றும் இல்லாமலேயே சுவறேறும்போதே என்னிடம் மாட்டிக் கொண்டாய். சமான்களை மூட்டைக் கட்டி, எடுத்து வரும்போது சத்தம் கேட்டு கண்டிப்பாக காவலாளிகளிடம் மாட்டிக் கொள்வாய், அதனால் இந்த கோட்டையின் உரிமையாளர், மிகவும் விரும்பி விலையுயர்ந்த மூன்று வைரக்கற்களை, எந்த அறையில், எந்த இடத்தியில் வத்துள்ளார் என்பதை விவரமாகக் கூறி அனுப்பினார். அவனும் அவர் கூறியபடி சென்று, வைரக்கற்கள் உள்ள பெட்டியை திறந்துப் பார்த்தான். அந்த இருட்டில் வைரக்கற்களின் ஒளியில் கண்கள் கூசியது. அதை எடுத்துக் கொண்டு திரும்பியபோது ஒரு எண்ணம் தோன்றியது. எவ்வளவு விருப்பமிருந்திருந்தால் இந்த கற்களை மிகபெரிய விலைக் கொடுத்து வாங்கியிருப்பார். இது திருடு போனதை அறிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாரென நினைத்து, நாம் மூன்றும் எடுத்து போனால் கூட சரிசமமாக பங்கு போடமுடியாது. எனவே பாவம் இவருக்கும் ஒன்று வைத்து விட்டு போவோமென்று, ஒன்றை வைத்து விட்டு இரண்டு கற்களை மட்டும் எடுத்துக் கொண்டுபோனான். கிழவருக்கு ஒன்றைக் கொடுக்க, அவரும் மற்றொன்று எங்கே என கேட்க, அவன் செய்ததைச் சொல்லிவிட்டு நகரப் பார்த்தான். உன் இருப்பிடம் சொல், தேவைப்படின் உனக்கு உதவுகிறேனென அவன் இருப்பிடத்தை தெரிந்துக் கொண்டார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.