பகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பும்போது, அதன் நினைவுகளிலேயே முழ்கியவனாய், அந்த இருட்டு அறையிலே பக்கத்திலிருக்கும் சாமாங்களை கவனிக்கத் தவறி, அதன் மேல் மோதிவிட்டான். அதனால் அந்த பொருட்கள் கீழே உருண்டு விழுந்தன.அதனால் ஏற்பட்ட சத்தத்தால் காவலாளிகள் அரைதூக்கத்திலிருந்து விடுப்பட்டு, சத்தம் வந்த பொக்கிஷ்ய அறையை நோக்கி விரைந்தனர். அவன் அவர்களிடமிருந்து தப்பி, விரைவாக கயிற்றின் மூலம் சுவறே வேளியே வந்து விட்டான். பிறகு தான் கிழவரிடம் நடந்த விவரத்தை கூறி, வரத்தையும் பங்குக் கொடுத்து, தங்குமிடத்தையும் காட்டி, அவரை வழியனுப்பி வைத்தான்.
அப்பாடா...! இந்த வைரத்தை சில நாட்கள் கழித்து விற்று, பணமாக்கிக் கொண்டால், இனி திருட வேண்டியது இல்லை. ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடியு செய்துக் கொண்டு உறங்கினான். அவன் திருடிய இடம் ராஜாவின் அரண்மனை என்பது அவனுக்குத் தெரியாது. மறு நாள் காலையிலேயே முதலமைச்சரை வரவழைத்து, என்னென்ன களவு போயிருக்கிறது என்பதை கண்க்கு எடுத்து வர சொன்னார். முதலமைச்சரும் கண்க்கு பார்த்து விட்டு, எல்லாம் சிரியாக இருக்கிறது, நீங்கள் விரும்பி வாங்கி வைத்த அந்த மூனறு வைரங்கள் மட்டுமே காண்வில்லை என்று கூறினார். உடனே திருடனைப் பிடிக்க நாலாபுறமும் வீர- -ர்களை அரசர் அனுப்பி வைத்தாதுடன், பிடித்து வரவில்லையெனில், தலை துண்டிக்கப் படுமென கட்டளையுமிட்டார். அவர்களும் தேடிவிட்டு திருடனைப் பிடிக்கமுடியாமல் வந்து, அரசர் முன்பாக தலை குனிந்து நின்றனர். அரசரோ, மிக கோபமாக காவலும் காக்கத் தெரியவில்லை, ஒரு திருடனைக்கூட பிடிக்க முடியவில்லையென கர்ஜித்தார். பிறகு அவரே, அவரின் மெய்காப்பாளனை அருகில் அழைத்து, காதோடு ஒரு தகவல்ம் கூறியனுப்பினார். அவன் சென்று சிறிது நேரத்தில், அரசவையில் அரசருக்கு முன்பாக ஒருவனை பிடித்து வந்து நிறுத்தினான். அரசரும் அவனைப் பார்த்து, என்னப்பா நேற்று எங்காவது நீ திருடினாயா? என கேட்டார். அவனும், ஆமாம் நேற்று ஒரு மாளிகையில் திருடினேன் என கூறினான். என்ன திருடினாய்/, திருடியதை எங்கே மறைத்து வைத்துள்ளாய்? என்று கேட்டார். எங்கும் மறைத்து வைக்கவில்லை, என்னிடமே உள்ளது என கூறி, அவனிடமிருந்த ஒரு வைரக்கல்லைக் கொடுத்தான். உண்மையைக் கூறு, ஒரு வைரக்கல்லைத்தான் திருடினாயா?, உண்மையை கூறாவிட்டால், உன் தலையைத் துண்டித்து விடுவேன் என்றார். நேற்று இரவு நடந்த விசயங்களை முழுவதும் கூறினான்.
அப்படியெனில் கிழவரின் இருப்பிடம் கூறு, அவரை பிடித்து உண்மையைத் தெரிந்துக் கொள்வதுடன், நீ கொடுத்ததாககூறும் வைரத்தையும் பறிமுதல் செய்யலாம் என்றதற்கு, அவறீருப்பிடம் எனக்கு தெரியாது, என் இருப்பிடம் மட்டும் அவர் தெரிந்துக் கொண்டு, மீண்டும் அவரே வந்து பார்ப்பதாக கூறிச் சென்று விட்டதையும் சொன்னான். அப்பொழுது அரசர், திடிரென அரசவையிலிருந்து எழுந்து சென்று விட்டார். அந்த சமயத்தில் அரசவையின் கூடியிருந்த மக்கள் கூட்டத்தினிடையே ஒரு கிழவரை,அவன் கண்டு அவ்ரை பிடிக்குமாறு கூச்சலிட்டான். காவாலாளிகளும் அவரை பிடித்து, அவனுக்கு அருகில் அழைத்து வந்தன்ர். அவரைப் பார்த்து, நேற்று உங்களிடம் கொடுத்த வைரக்கல்லை கேட்க, என்னிடம் நீ கொடுக்கவில்லையென அவரும் மறுக்க, பொய்யா சொல்கிறீரென, அவர் மீது பாய்ந்தான். அவரோ விலக, அவரின் தாடி அவன் பிடியில் சிக்கி கையோடு வந்து விட்டது. பிறகு அந்த கிழவர் வேசத்தை களைத்து அரசராக அரசவை முன் நின்றார். அவர் சிம்மாசனத்தில் அமர்ந்த பிறகு, என்னிடம் ஒன்ரு உள்ளது என்று கூறி விட்டு,நீ சொல்லியதெல்லாம் உண்மையென்றால், மற்றோரு வைரம் எங்கேயன மீண்டும் கேட்டார். சிறிது யோசனைக்கு பிறகு, யார் இன்று கண்க்குகளை முதலில் சரிபார்த்தது என அவன் கேட்டான். மதலமைச்சரென அரசர் கூர, அந்த நேரத்தில் முதலமைச்சர் நடுங்குவதையும், அவரின் கைகள் இடுப்பின் பக்கம் செல்வதையும் கவனித்து விட்டான். அவனின் முக மாருதலை கவனித்த அரசர் உனக்கு யார் மீதாவது சந்தேகமிருந்தால் கூறு, அவர்களையும் விசாரித்து விடலாம் என்றார். முதலமைச்சரின் இடுப்பு வேட்டியை பிடித்து இழுக்க, அவர் மடியிலிருந்து, பெட்டியுடன் வைரக்கல் கீழே விழுந்தது. . முதலமைசரும் மன்னித்துவிடும்படி மன்னரின் காலடியில் விழுந்தார்.ஆனால் மன்னரோ, உண்மையாய் இருக்கவேண்டிய நீர் மோசம் செய்து விட்டீர். இவன் திருடனாய் இருந்தாலும் உண்மையைப் பேசினான். எனவே இன்று முதல் இவனுக்கு முதலமைச்சர் பதவியும், உமக்கு பாதாளசிறையில் ஆயுட்கால கடுங்காவல் சிறைத்தண்டனையும் அளிக்கிறேன் என உத்தரவையிட்டதைக் கண்டு மக்கள், "அரசர் வழ்க, வாழ்க" என வாழ்த்தினர்.
இவ்வளவுதாங்க இந்த கதை. உண்மை என்னிக்கும் ஜெயிக்குமுங்க.
ரொம்ப சின்ன வயசுல இந்த கதைய நான் படிச்சது..!!.
கருத்து சொல்லுங்களேன்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.