மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 200 ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறேன்: சச்சின்

என் சொந்த செலவில் 200 ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.

மும்பை பாந்திரா எம்.ஐ.ஜி விளையாட்டு மைதானத்தில் கிவ் இந்தியா' என்ற சமூக அமைப்பு சார்பில் நலிவடைந்த பிரிவினர், ஏழைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகை நந்திதாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் தெண்டுல்கர்,

சமுதாயத்தில் நலிவடைந்த மக்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் தம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். நான் சிறுவயதில் இருக்கும் போது என்னுடைய தந்தை ஏழைகளிடம் மிகவும் அன்பாக இருப்பதை பார்த்துள்ளேன். அவரிடம் இருந்து தான் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

நான் சென்னையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஊனமுற்றோர்களுடன் கிரிக்கெட் விளையாடினேன். அப்போது அந்த ஊனமுற்றவர்கள் மிகவும் மிகழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய குழந்தையின் பிறந்தநாளன்று குடிசை பகுதி மக்களை சந்தித்து நோட்டு, புத்தகம் வழங்கும் பழக்கம் ஏற்பட்டது. என் சொந்த செலவில் 200 ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறேன்.

ஒவ்வொரு இந்தியனும் ஏழைகளுக்கு துணிமணிகள், பணம் என தங்களால் இயன்றவற்றை கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

நன்றி :: நக்கீரன்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.