பிளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு பிளாஷ் டிரைவிற்கு மாறியவரா நீங்கள்? உங்களின் பிளாஷ் டிரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் டிரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் டிரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் டிரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம்.
ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த டிரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் டிரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும். கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் டிரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு டிரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.
பிளாஷ் டிரைவ்களை நாம் பல்வேறு கம்ப்யூட்டர்களில் இணைத்துப் பயன் படுத்துகிறோம். பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று தெரியாது. அவற்றை அவ்வப்போது செக் செய்திடவும் முடியாது. அவை தரும் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் பெற முடியாது. அப்படியே அந்த கம்ப்யூட்டரில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும் அது அப்டேட் செய்யப்பட்டதா எனவும் நாம் உறுதி செய்து கொள்ள முடியாது. எனவே பாதுகாப்பற்ற ஒரு கம்ப்யூட்டரில், பிளாஷ் டிரைவை இணைத்துப் பயன்படுத்துகையில் நம் பிளாஷ் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் உள்ள தகவல்களை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
இந்நிலையில் தான் நம் பிளாஷ் டிரைவினையும், வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதுள்ளது. அதற்கான ஒரு புரோகிராம் குறித்து இங்கு காணலாம். AntiVir personal Edition என்னும் புரோகிராம் இவ்வகையில் சிறந்த புரோகிராமாக நமக்குக் கிடைக்கிறது. இந்த புரோகிராமினை பிளாஷ் டிரைவில் பதிந்து அதிலிருந்தே இயக்கலாம். இதனால் வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த புரோகிராமினையும் தேவைப்படும்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை நம் பிளாஷ் டிரைவில் பதிந்து கொள்வதும் எளிதாக உள்ளது.
தரவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யவும்
AdAware SE Personal Edition 1.06 இந்த புரோகிராம் நம் பிளாஷ் டிரைவிற்குள் எந்த ஸ்பை வேர் புரோகிராமும் நுழையவிடாமல் பாதுகாக்கிறது. இவ்வகையில் இதன் திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இந்த புரோகிரமினை இன்ஸ்டால் செய்திடுகையில் நேரடியாக உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின் Start, Programs, எனச் சென்று அங்கு கிடைக்கும் AdAware பைலினை உங்கள் பிளாஷ் டிரைவில் காப்பி செய்து விடுங்கள். பிளாஷ் டிரைவ் பாதுகாப்பில் இருக்கும் படி செட் செய்துவிடுங்கள். ஒரு சிலர் இவ்வளவு வேலை இருக்கிறதா? பேசாமல் பிளாஷ் டிரைவினை நம்பிக்கையற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இணைக்க வேண்டாம் என்று எண்ணுவார்கள். இந்தக் காலத்தில் நம்பிக்கை உள்ள மற்றும் நம்பிக்கை இல்லாத கம்ப்யூட்டர் என்று எதுவுமே இல்லை. எதில் வேண்டு மானாலும் மோசமான வைரஸ் இருக்கலாம். எனவே பாதுகாப்பு வளையங்களை மட்டும் அதிகப்படுத்தினால் போதாது. எச்சரிக்கையுடனும் கம்ப்யூட்டர்களைக் கையாள வேண்டும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
ஒரு சின்ன பிளாஷ் டிரைவ் இருந்தால் போதும். உங்களுடைய பிரியமான, உங்களுடைய விருப்பங்களுக்கேற்றபடி வடிவமைக்கப் பட்ட சாப்ட்வேர் புரோகிராம்களைத் தூக்கிச் சென்று பயன்படுத்தலாம். ஒரு மெமரி ஸ்டிக்கில் எடுத்துச் சென்று உங்களுடையதாக மட்டும் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் இப்போது புழக்கத் தில் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிளாஷ் டிரைவில் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் வேர்ட் புரோகிராம் முழுவதையும் இன்ஸ்டால் செய்து கொண்டு போய் பயன்படுத்த முடியாது. இதற்கென போர்டபிள் அப்ளிகேஷன் புரோகிராம்கல் உள்ளன. அவற்றைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
அவை புரோகிராம்களையும் அதில் உள்ள ஸ்பெஷல் செட்டிங்குகளையும் பதிந்து வைத்து எடுத்துச் சென்று பயன்படுத்த தருகின்றன. இப்படி அனைத்து புரோகிராம்களும் நமக்குக் கிடைப்பதில்லை. ஒரு சில முக்கிய பயன்பாடு களுக்கான போர்ட்டபிள் புரோகிராம்கள் கிடைக்கின்றன. முதலில் இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கான புரோகிராம் குறித்து பார்க்கலாம். இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசர் புரோகிராம். இதற்கு ஒரு மெமரி கீ ஸ்டிக்கில் 30 எம்பி அளவு இடம் இருந்தால் போதும். இதனை முதலில் டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் மெமரி ஸ்டிக்கை அதன் ஸ்லாட்டில் செருகி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் டெஸ்க்டாப்பில் இருக்கும் புரோகிராமினை இருமுறை கிளிக் செய்து இன்ஸ்டாலேஷன் செயல்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

முதலில் கிடைக்கும் விண்டோக்களில் லைசன்ஸ் அக்ரிமெண்ட் ஆகியவற்றிற்கு சரி என்று கிளிக் செய்து எங்கு இன்ஸ்டால் செய்திட என்று கேட்கும்போது மெமரி ஸ்டிக்கின் டிரைவைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும். சில நிமிடங்களில் மெமரி ஸ்டிக்கில் புதிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டு பயர்பாக்ஸின் போர்டபிள் பதிப்பு ஒன்று அதில் இருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்கிப் பார்க்கவும். மெமரி ஸ்டிக்கில் இருந்து இயங்கும் பிற புரோகிராம்கள் மற்றும் பைல்களைப் போல இதுவும் சற்று மெதுவாகத்தான் இயங்கும். அது குறித்து கவலைப் படாமல் தொடர்ந்து பிரவுஸ் செய்திடுங்கள்.
உங்கள் வழக்கமான செட்டிங்குகளை ஏற்படுத்துங்கள். புக் மார்க்குகளை உருவாக்குங்கள். இனி இந்த மெமரி ஸ்டிக் மூலம் நீங்கள் யாருடைய கம்ப்யூட்டரில் வேண்டுமென்றாலும் உங்களுக்குப் பிரியமான பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வரலாம். போர்ட்டபிள் பயர்பாக்ஸ் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இன்டர்நெட் தளம் சென்று இமெயில்களைக் காண முடியும் என்றாலும் நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் மூலம் அவர்களின் சர்வரில் இருந்து மெயில் களை டவுண்லோட் செய்திட உங்களுக்கு ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம் தேவை. இதற்கென தண்டர்பேர்ட் போர்ட்டபிள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் கிடைக்கிறது.

ஏற்கனவே முன் பத்தியில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் புரோகிராமினை மெமரி ஸ்டிக்கில் இன்ஸ்டால் செய்தது போல இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்து இயக்கி எப்படி டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள தண்டர்பேர்ட் தொகுப்பில் அக்கவுண்ட் உருவாக்கி இமெயில்களை டவுண்லோட் செய்து கையாண்டீர்களோ அதே போல இதிலும் செயல்படலாம். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திடும் இமெயில்களெல்லாம் மெமரி ஸ்டிக்கிலேயே இடம் பெறும். எனவே மிக அதிக அளவில் இமெயில்களைப் பெறுபவர்கள் சற்று கவனத்துடன் அவற்றை டெஸ்க் டாப்பிற்கு அல்லது இணையத்தில் உள்ள ஸ்டோரேஜ் டிரைவ்களுக்கு மாற்றிவிட வேண்டும். இந்த தொல்லையைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் வெளியே செல்கையில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் இந்த மெமரி ஸ்டிக் இமெயில் டவுண்லோடிங் செயல்பாட்டை மேற்கொள்ளவும்.
ஓகே. உங்கள் ஸ்டிக் மூலம் நீங்கள் விரும்பும் வகையில் இணையம் செல்வதும் இமெயில் பார்ப்பதுவும் சரி. வேறு டெக்ஸ்ட் உருவாக்கும் செயல்பாடுகளை மெமரி ஸ்டிக் மூலம் மேற்கொள்வது எப்படி? அதிர்ஷ்டவசமாக நமக்கு ஓர் அருமையான வேர்ட் பிராசசிங் புரோகிராம் கிடைத்துள்ளது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து புரோகிராம் வசதிகளும் இதில் உள்ளன. அது ஓப்பன் ஆபீஸ் என அழைக்கப்படும் புரோகிராம் ஆகும்.
ஓப்பன் ஆபீஸ் சற்று பெரிய புரோகிராம். மெமரி ஸ்டிக்கில் 190 எம்பி இடம் எடுத்துக் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்வது பயர்பாக்ஸ் மற்றும் தண்டர் பேர்டைக் காட்டிலும் எளிதானது. ஏனென்றால் லைசன்ஸ், கண்டிஷன் என்பதெல்லாம் கிடையாது. இது சற்று நேரம் பிடிக்கும் என்பதால் மெமரி ஸ்டிக்கில் பதியும்போது பொறுமையாக இதனைப் பதிய வேண்டும். இதுவும் செயல்படுகையில் சற்று மெதுவாகவே செயலாற்றும் என்றாலும் இது தரும் வசதிகளுக்காக இதனைப் பொறுத்துக் கொள்ளலாம்.

போட்டோக்களைக் கையாளவும் நமக்கு ஒரு போர்ட்டபிள் அப்ளிகேஷன் உள்ளது. இதனை GIMP என்று அழைக்கின்றனர். இது மெமரி ஸ்டிக்கில் 18 எம்பி இடத்தைக் கேட்கிறது. இந்த பைலை டவுண்லோட் செய்த பின்னர் டபுள் கிளிக் செய்து Extract என்பதில் கிளிக் செய்திடவும்.
இது Gimp portable என்ற போல்டரை உருவாக்கும். இந்த போல்டரை அப்படியே மெமரி ஸ்டிக்கில் காப்பி செய்திடவும். பின் இன்ஸ்டால் செய்திடவும். பயர் பாக்ஸ், தண்டர் பேர்ட், ஓப்பன் ஆபீஸ் போல இது விண்டோஸ் மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நன்றாக இயங்குகிறது. போட்டோக்களைக் கையாளவும் ஒரிஜினல் ஆர்ட் ஒர்க் மேற் கொள்ளவும் தேவையான அனைத்து டூல்களும் இந்த புரோகிராமில் கிடைக்கின்றன. பெரும்பான் மையான இமேஜ் பைல்களை இது ஏற்றுக் கொள்கிறது.

மேலே சொன்னவை எல்லாம் கடமைகளை மேற்கொள்ள நமக்கு உதவிடும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள். பொழுது போக்குவதற்கான அப்ளிகேஷன்கள் ஒன்றுமே கிடையாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். VLC என்ற புரோகிராம் இதற்கெனவே தயாரிக்கப்பட்டு கிடைக்கிறது. மெமரி ஸ்டிக்கில் 17 எம்பி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மேலே சொன்ன வழிகளிலேயே இதனையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். எம்பி3, எம்பி 4 மற்றும் டிவ் எக்ஸ் வீடியோ போன்ற பலவகை ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த போர்ட்டபிள் புரோகிராம் மூலம் இயக்கலாம்.

பி.டி.எப். பைல்களை நாம் அடிக்கடி திறந்து படிக்க வேண்டியுள்ளது. சிலர் இந்த பைல்களை அறவே பயன்படுத்துவதில்லை. அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகையில் நாம் பி.டி.எப். பைல்களை எப்படி படிக்க முடியும்.இதற்காகவே Sumatra PDF என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதே போல Clamwin Portable என்ற புரோகிராம் ஆண்டி வைரஸ் புரோகிராமாகவும், 7Zip என்ற புரோகிராம் விண்ஸிப் புரோகிராம் போலவும் செயல்படுகின்றன.

ஒரு காலத்தில் செங்கல் ஒன்றில் பாதியளவு ஹார்ட் டிஸ்க் ஒன்று எடுத்துச் சென்று பயன்படுத்தும் விதத்தில் 20 எம்பி டேட்டாவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இன்று பாக்கெட்டில் பல ஜிபி டேட்டாவை எடுத்துச் செல்ல முடிகிறது. மேலே குறிப்பிட்ட போர்ட்டபிள் அப்ளிகேஷன்களை ஒரு மெமரி ஸ்டிக்கில் பதிந்து எடுத்து செல்வதன் மூலம் ஒரு கம்ப்யூட்டரை அல்லவா பாக்கெட்டில் எடுத்துச் செல்கிறோம்.

எழுதியவர் : கார்த்திக்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.