மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜீத்!

ஜூன் -22ல் விஜய்யின் பிறந்தநாள். இந்நாளில் கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் விஜய். இதற்கு போட்டியாக அஜீத்தும் களமிறங்கியிருக்கிறார். ஆனால் என்ன செய்யப்போகிறார் என்றுதான் தெரியவில்லை.எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய், இந்த வரிசைக்குள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இருக்கிறார் அஜீத்.

அதனால்தான் தமிழகம் முழுவதும் உள்ள தனது முப்பதாயிரம் ரசிகர் மன்றங்களின் லிஸ்டை பக்காவாக தயாரிக்க சொல்லியிருக்கிறாராம் அஜீத். இந்த பணியை அஜீத்தின் ஆரம்பகால நண்பரும், தற்போதைய மேனேஜருமான சுரேஷ் சந்திரா செய்து வருகிறார்.

விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று செய்திகள் வருகிற இந்த நேரத்தில் தனது ரசிகர் மன்ற விபரங்களை கணக்கெடுத்து அவைகளை ஒழுங்கு படுத்த கட்டளையிட்டிருக்கும் அஜீத், அடுத்து என்ன செய்வார் என்ற ஆவல் எழுந்துள்ளது திரையுலகத்தினர் மத்தியில்.

சென்னையில் இருந்தால் கூட ரசிகர்களை சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டாதவர் அஜீத். அப்படியிருக்க இந்த நேரத்தில் இந்த கணக்கெடுப்பு எதற்கு?


நன்றி : நக்கீரன்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.