மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினியை யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை!

சமீபத்தில் சென்னையில் கமல்ஹாஸன் நடத்திய திரைக்கதை பயிற்சிப் பட்டறைக்கு வந்திருந்த சேகர் கபூர், திரைக்கதை உருவாக்கம் குறித்து, கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களுக்கு பாடம் எடுத்தார்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய இயக்குநர் சேகர் கபூர். மிஸ்டர் இந்தியா, பண்டிட் குயின், எலிஸபெத் போன்ற உலகப் புகழ்பெற்ற இந்தி- ஆங்கில திரைப்படங்களின் இயக்குனர்.


சேகர் கபூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் ஒரு அசாதாரண கலைஞர். நானும் ரஜினியும் இணைந்து பணியாற்றுவது குறித்து நிறையப் பேசியிருக்கிறோம். அப்படியே வருடங்கள் ஓடிவிட்டன. திரைப் படங்களை மக்கள் விரும்பும் வகையில் தருவது எப்படி என்பதில் ரஜினி தேர்ந்த படைப்பாளியும் கூட.


ஆரம்ப காலப் படங்களிலேயே மிகச் சிறந்த நடிப்பையும், யாருக்கும் வசப்படாத தனி ஸ்டைலையும் தனக்கென உருவாக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரஜினி. எனக்குத் தெரிந்து அவர் அளவுக்கு ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்துள்ள நடிகர்கள் யாருமில்லை.


இப்போது ரஜினியை வைத்து அவரது மகள் செளந்தர்யா ரஜினி சுல்தான்- தி வாரியர் படம் செய்து வருவதை அறிந்து சந்தோஷப்பட்டேன்.


அந்தப் படத்தை நிச்சயம் முதல்நாளே பார்த்துவிடும் அளவுக்கு எனக்கு ஆர்வமாக உள்ளது.


பொதுவாக எனக்கு ஒப்பீடுகள் பிடிக்காது. ரஜினியை யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை’’ என்றார்.

நன்றி : நக்கீரன்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.