தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக, நான் அவன் இல்லை' என்ற பழைய தமிழ் படத்தை மீண்டும் தயாரித்து வெற்றிபெற்றவர், நேமிசந்த் ஜபக். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இவரே தயாரிக்கிறார்.
நான் அவன் இல்லை' பாகம் 1 படத்தை இயக்கிய செல்வாவே இந்த படத்தையும் இயக்குகிறார். அதில் கதாநாயகனாக நடித்த ஜீவனே இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.
தயாராகும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் இதுபோல் டைரக்டர், தயாரிப்பாளர், கதாநாயகன் ஆகிய மூன்று பேரும் மீண்டும் இணைவார்கள். அதே பாணியில் நேமிசந்த் ஜபக், செல்வா, ஜீவன் ஆகிய மூன்று பேரும் நான் அவன் இல்லை' பாகம் 2 படத்தில் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.
நான் அவன் இல்லை' பாகம் 1 படத்தின் இறுதி காட்சியில், எல்லோரையும் ஏமாற்றிய ஜீவன் ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் இருப்பது போல் படம் முடிவடைந்தது. அதனால் இரண்டாம் பாகத்தையும் அங்கிருந்தே தொடர்வது என்று முடிவெடுத்து, சுவிட்சர்லாந்து, ஜெனீவா, பிரேசில், துபாய் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
கதாநாயகன் ஜீவனுடன் சங்கீதா, லட்சுமிராய், ஸ்வேதா, ஹேமமாலினி, ரச்சரா ஆகிய 5 கதாநாயகிகள் கலந்துகொண்டு நடித்தார்கள். இவர்களில் லட்சுமிராய், நடிகையாகவே படத்தில் வருகிறார். வெளிநாட்டு படப்பிடிப்புக்கு வரும் லட்சுமிராய், ஜீவன் விரித்த வலையில் வசமாக சிக்குவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜீவன் லட்சுமிராய் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்கியபோது, கடுமையான பனிமழை பெய்தது. குளிர் தாங்காமல் நடுங்கிய லட்சுமிராய் 20 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கவர்களை தன் உடம்பில் கட்டிக்கொண்டார். நடிக்கும்போது மட்டும் அவைகளை கழற்றி விடுவார்.
அப்படி அவர் நடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பனிக்குழிக்குள் விழுந்தார். பனிக்கட்டிகள் அவர் மீது விழுந்து மூடின. அதிர்ஷ்டவசமாக அதை கவனித்த படப்பிடிப்பு குழுவினர், பனிக்கட்டிகளை அகற்றி, லட்சுமிராயை மேலே தூக்கினார்கள். லட்சுமிராய் அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டார்.
அவரை, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது.
நன்றி :: நக்கீரன்

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.