மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


>மைக்ரோசாப்ட் மலிசியஸ் ( Malicious Software Removal Tool)

மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன் படுத்தி வரும் அனைவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் அப்டேட் பைல்களை வெளியிடும் போதெல் லாம் அத்துடன் சேர்த்து Microsoft Windows Malicious Software Removal Tool என்ற ஒரு புரோகிராமினையும் சேர்த்து வெளியிடும்.

இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் நீங்கள் பதியும் அப்ளிகேஷன் புரோகிராம் களில் ஏதேனும் கெடுதல் விளைவிக்கும் வகையிலான புரோகிராம்கள் இணைந்து வருகிறதா என இது கண்காணித்து உங்களை எச்சரித்து அதனை நீக்கும்.

எடுத்துக் காட்டாக பிளாஸ்டர், சாசர் மற்றும் மைடூம் போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராகளை இந்த புரோகிராம் அறிந்து நீக்குகிறது. பதியப்பட்ட புதிய புரோகிராமினை ஸ்கேன் செய்து அதில் இது போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் இருந்தால் நீக்கிவிட்டு உங்களுக்கும் தகவல் தரும்.

இந்த சாப்ட்வேர் ரிமூவல் டூல் புரோகிராமும் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளில் வெளிவருகிறது.ஒவ்வொரு முறை அப்டேட் பைல்களுடன் வரும் இந்த புரோகிராமின் பதிப்பு உங்கள் கம்ப்யூட்டரின் பின் புலத்தில் அமர்ந்து கொண்டு இயங்கி இந்த பாதுகாப்பு வேலையை மேற்கொள்கிறது.அப்படியானால் நாமாக இந்த தொகுப்பை இறக்கிக் கொள்ள முடியுமா என்றால் தாராளமாக மைக்ரோசாப்ட் இணையதளம் சென்று இதனை இறக்கிப் பதிந்து பின் இயக்கலாம்.

எப்படி ஆண்டி வைரஸ் மற்றும் வைரஸ் ஸ்கேனர் போன்ற புரோகிராம்களை அவ்வப் போது அப்டேட் செய்து மேம்படுத்திக் கொள்கிறோமோ அதே போல இந்த Malicious Software Removal Tool புரோகிராமினையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.