
உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும்.ஒரு பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரைச் சுற்றிப் பாதுகாப்பு கோட்டை ஒன்றை அமைக்கிறது.
இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் யாரேனும் ஹேக்கர்கள் உங்கள் கம்ப்யூட்டரினுள் ஏதேனும் ஒரு புரோகிராம் வழியாக நுழைய முற் படு கையில் அவர் களைத் தடுத்து நிறுத்தி உங் களுக் கும் செய்தி தருகிறது. இந்த இணைய தள முக வரியிலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய ஒரு முயற்சி நடந்தது. அது முறியடிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு செய்தி காட்டப்படும். மேலும் ஆண்டி வைரஸ் தொகுப்பிற்குத் தப்பி வரும் வைரஸ் புரோகிராம்களையும் இது அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தி விடும். இலவச டவுண்லோட் பயர்வால் புரோகிராம்கள் பல இருந்தாலும் ஒரு சிலவே முழுமையான பாதுகாப்பினைத் தருகின்றன.
அந்த வகையில் Comodo Firewall என்ற இலவச பயர்வால் சாதனத்தைச் சொல்லலாம். இது பயர்வாலாகவும், வைரஸ் எதிர்ப்பு சாதன மாகவும் வைரஸ்களை எதிர்த்து செயல் பட்டு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு சாதனமாக வும் பயன்படுகிறது. எளிதாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து இயக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.