மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மொபைல் போன் பிரவுசர்கள்

மொபைல் போன் வழி நெட்வொர்க் இணைப்பினை சாதாரண மக்களும் விரும்பும் இந்நாளில் போனுடன் வரும் பிரவுசரைத்தான் ஒருவர் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. இணையத்தில் இதற்கெனத் தரப்படும் இலவச பிரவுசர்களையும் டவுண்லோட் செய்து மொபைல் போனில் இன்ஸ்டால் செய்தும் பயன்படுத்தலாம். அந்த வகையில் ஸ்கை பயர் மொபைல் பிரவுசர் (Skyfire Mobile Browser) குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. அதனைப் பற்றி இங்கு காணலாம்.


போனில் இல்லாத மொபைல் பிரவுசரை நாம் பயன்படுத்துவதற்கு முதல் காரணம் அதனை நம் விருப்பப்படி செட் செய்து அமைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் ஸ்கை பயர் மிகவும் ஒத்துழைக்கிறது. பிளாஷ் ,மீடியா வீடியோஸ் மற்றும் சில்வர் லைட் பதிப்பு 2 ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. வேகமாக இணையப் பக்கங்களை வழங்குகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து இயங்குகிறது. முதல் கட்ட தோற்றத்திலேயே இந்த பிரவுசர் நம்மைக் கவர்கிறது. நாம் இதன் முதல் பக்கத் தோற்றத்தினையே நமக்கேற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.


பிரவுசரை நம் பேஸ்புக், யு–ட்யூப் மற்றும் டிவிட்ட்டர் போன்ற அக்கவுண்ட்களுக்கு செட் செய்து நேரடியாக லாக் இன் செய்திடும்படி அமைக்கலாம். இதனுடைய அட்வான்ஸ்டு மெனு செட்டிங்ஸ் மூலம் குக்கீஸ் மற்றும் ஹிஸ்டரி பதிவுகளை நீக்கலாம். பிளாஷ் மற்றும் விண்டோஸ் மீடியா வீடியோஸ் சப்போர்ட் செய்வதால் அவற்றை எளிதாகவும் சிறப்பாகவும் காண முடிகிறது.

ஏற்கனவே ஆப்பரா மினி பயன்படுத்தித் தற்போது புதிய பிரவுசர் வேண்டும் என எண்ணுபவர்கள் ஸ்கை பயர் பிரவுசரைப் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆனால் மிகப் பெரிய திரையுள்ள மொபைல் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். இமேஜஸ் சற்று சிதறலாகின்றன. இந்தக் குறையை வரும் காலத்தில் ஸ்கை பயர் நீக்கிவிட்டால் நிச்சயம் இந்த இலவச பிரவுசர் பல மொபைல் போன்களில் இடம் பிடிக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பயர்பாக்ஸ் மூலம் பிரவுசர் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் மொஸில்லா நிறுவனம் மொபைல் போன்களுக்கான பிரவுசர் தொகுப்பு ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது. Firefox aka Fennec என இது அழைக்கப்படுகிறது.மொபைல் போனுக்கான பிரவுசர் மார்க்கட்டில் தன் முதல் பாணத்தை மொஸில்லா வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் தரும் அனுபவக் குறிப்புகளைக் கொண்டு செம்மைப் படுத்த மொஸில்லா திட்டமிடுகிறது. இப்போதைக்கு இந்த பிரவுசர் நோக்கியா 810 மொபைல் போனில் மட்டுமே செயல்படும்.


இதில் என்னவெல்லாம் இருக்கிறது?

* புக் மார்க் மற்றும் டேக்

* அருமையான யு.ஆர்.எல். பார் (இதனையும் “awesome bar” என அழைக்கலாம்)

* தம்ப் நெயில் படம் கொண்ட டேப் பிரவுசிங்

* யு.ஆர்.எல். பாரிலேயே இணைந்த வெப் தேடுதல்

* பல்வேறு சர்ச் இஞ்சின்களை எளிதாகப் பெற்று செயல்படுத்தும் வசதி

* பிரவுசர் கண்ட்ரோல்களை மறைத்து இணையப் பக்கத்தை முழுமையாகப் பெறலாம்

* ஸூம் வசதி உள்ளது.

பாப் அப் பிளாக்கர், பாஸ்வேர்ட் மேனேஜர், பிரைவேட் டேட்டா அழித்தல் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யவும்

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.