மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க

ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?

இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.

1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)

கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.

ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.

அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.

இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2.ரெகுவா(Recuva)

இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.


எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. மிக உபயோகமான பதிவு. மிக்க நன்றி. பணி தொடரட்டும்.

    அன்புடன் வெங்கட்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.