மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பன்றிக்காய்ச்சல் பரவுவது ஏன்?: விஞ்ஞானிகள் ஆய்வு

பன்றிக் காய்ச்சல் வைரஸ் உலகின் தெற்கு பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"நேச்சர" என்ற பத்திரிகையில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் உலகளவில் ஏற்பட்ட தொற்று நோய்களான, ஸ்பானிஷ் காய்ச்சல் (1918-1919), ஆசியன் காய்ச்சல் (1957) மற்றும் ஹாங்காங் காய்ச்சல் (1968 ), பறவை காய்ச்சல் ஆகியவை குறித்து ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த கட்டுரையில், "வைரஸ் காய்ச்சல் பற்றி ஏராளமான தகவல்களை தெரிந்து கொண்டாலும், பதில் தெரியாத சில கேள்விகளும் உள்ளன.

உதாரணமாக, வைரஸ் ஒரு இனத்தில் இருந்து மற்றொரு இனத்திற்கு பரவுதல், மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுதல், கடந்த கால தொற்று நோய்கள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொற்று நோய் ஆகியவற்றிற்கான காரணிகள் மற்றும் காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த புதிய பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான எச்1 என்1 வைரசை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம், இந்த நோய் ஆபத்தாக மாறுவது மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவுவது போன்றவற்றிற்கு காரணமான மரபியல் மாற்றத்தை கண்டறியலாம். இந்த வைரசை கண்காணிப்பதால், விஞ்ஞான ரீதியாக பல அரிய தகவல்கள் கிடைக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்த சர்வதேச அளவிலான குழு ஒன்று, பன்றிக் காய்ச்சல் வைரசின் தோற்றம் அதன் ஆரம்ப கால வளர்ச்சி ஆகியவை குறித்து அறிய பரிணாம ஆய்வு ஒன்று செய்துள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,"பன்றியின் உடம்பில் பல வைரஸ்கள் சேர்ந்து, அதிலிருந்து பன்றிக் காய்ச்சல் நோய்க்கு காரணமான வைரஸ் உருவாகிறது. அந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாகி உள்ளது" என்றனர்.

அதே சமயம் இது பறவைக் காய்ச்சல், அல்லது வேறு புளூ ரகங்கள் போல அதிக அபாயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி பெரிதாகப் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

இந்நிலையில், ஸ்காட்லாந்தில், பன்றிக் காய்ச்சல் நோயால் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்ததாக, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் நேற்று முன்தினம் வரை 498 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஸ்காட்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் நிகோலஸ் ஸ்டர்ஜன் கூறுகையில், "பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, கடுமையான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

எனவே ஒருவர் உயிரிழந்திருந்தாலும், பொது மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோயால் மிகவும் குறைந்தளவு அபாயமே நிலவுகிறது2 என்றார்.

பன்றிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 ஆயிரம் பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.