ஒரு வித்தியாசத்திற்காக கூட்டணியில் இருந்து கொஞ்சம் விலகி வேறொரு நபருடன் பணியாற்றினால் விரிசல் விழுந்துவிடுகிறது.
இது எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்தில் இருந்தே நடந்துவருகிறது. அதிலும் இசைத்துறையில் கொஞ்சம் ஓவராகவே இருக்கு இந்த ஈகோ.
அந்த வகையில்தான் இயக்குநர் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ், சரண் - பரத்வாஜ் என்று பலரும் பிரிந்தார்கள். இந்த ஈகோ சகோதரர்களையும் விட்டுவைக்கவில்லை.
இதைப்பற்றி இயக்குநர் பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்.
''நான் முதன்முதலாக இயக்கிய `சுவரில்லா சித்திரங்கள்' படத்துக்கு இசையமைத்தவர், கங்கை அமரன். அந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து, `மவுனகீதங்கள்' படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்த படம் வெள்ளிவிழா ஓடியது.
ஏவி.எம்.நிறுவனத்துக்காக, `முந்தானை முடிச்சு' படம் செய்தபோது, இசையமைப்பாளராக கங்கை அமரனைத்தான் போடவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏவி.எம். நிறுவனத்தினர், இளையராஜாவை போட வேண்டும் என்றார்கள். ஒரு கட்டத்தில், கங்கை அமரனே என்னிடம் வந்து, ``அண்ணனே இசையமைக்கட்டும். நான் அடுத்த படத்துக்கு பண்ணுகிறேன்'' என்றார்.
நான், இளையராஜாவிடம் சென்றபோது, ``நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். அதனால் இசையமைக்க மாட்டேன்'' என்றார்.
``அமரன் யார், ஆப்பிரிக்காக்காரரா, உங்க தம்பிதானே'' என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும்...போதும்...என்றாகி விட்டது''என்று தெரிவித்துள்ளார்.
அது சரி, அண்ணன் என்னடா..தம்பி என்னடா...அவசரமான உலகத்திலே.....!

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.