மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ரேயா செய்த பரவச கலகல...

ஸ்ரேயாவை பார்க்கும் போதெல்லாம் ஒருவித பரவச நிலைக்கு செல்கிறார்கள் ரசிகர்கள். ஆனால், ஸ்ரேயாவோ எல்லாம் வல்ல இறைவனை தேடிப்போய் பரவசத்தை பெறுவதில் தீவிரமாக இருக்கிறார். வெள்ளியங்கிரி மலைக்கு போய் தியான லிங்கத்தை தரிசித்து வந்தவர், கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி சென்றிருந்தார். அதிகாலையில் சுப்ரபாத தரிசனத்தை முடித்துவிட்டு கிளம்பியவர், அப்படியே காளஹஸ்திக்கு சென்று மனமுருக வேண்டினார்.

கோவிலுக்கு போவதும், கும்பிட்டு தொழுவதும் கூட இயற்கைதான். ஸ்ரேயா செய்த இன்னொரு பூஜைதான் என்னவோ, ஏதோ என்று புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. காளஹஸ்தி கோவில் நாக சர்ப தோஷம் உள்ளவர்களுக்கு விசேஷமானது. திருமணம் தள்ளி போகிறதே என்று கவலைப்படுகிறவர்களை இங்கே அனுப்பி சர்பதோஷ பரிகாரம் செய்ய சொல்வது பண்டிதர்களின் வழக்கம்.

இங்கு வந்த ஸ்ரேயா, இந்த நாக சர்ப தோஷ பிரார்த்தனையும், அதற்கான நிவாரண பூஜையும் செய்தாராம். ஒருவேளை ஸ்ரேயாவுக்கு கல்யாண ஆசை வந்திருச்சோ என்னவோ? அது போகட்டும்... இவர் வந்திருப்பதை அறிந்த திருவாளர் பொதுஜனம், விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைய முயல, போலீஸ் வந்து காப்பாற்றியதாம் ஸ்ரேயாவை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.