மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினி டைட்டிலை விடாமல் பற்றிக் கொண்டார்

ரஜினி டைட்டிலை விடாமல் பற்றிக் கொண்டார் போலிருக்கிறது ஷக்தி சிதம்பரம். ராஜாதி ராஜா வந்த கையோடு சுட சுட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது குரு சிஷ்யன். டைட்டிலுக்கு ஏற்ற மாதிரியே பூஜையை போட்டு பிரமாதப்படுத்திவிட்டார் ஷக்தி.

தமிழ்சினிமாவால் கொண்டாடப்பட்ட குரு சிஷ்யர்கள்தான் இப்பட துவக்க விழாவின் சிறப்பு விருந்தினர்கள். பாக்யராஜ்-பார்த்திபன், ராமநாராயணன்-பேரரசு,
மணி வண்ணன்-சீமான், கே.எஸ்.ரவிக்குமார்-சேரன் என்று பட்டையை கிளப்பிய குரு சிஷ்யர்கள் ஷக்தி சிதம்பரத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

சத்யராஜின் பேச்சில் இன உணர்வும், எதார்த்தமும் நீர்த்துப் போகாமல் இருந்தது. எனக்கு குரு தந்தை பெரியார்தான். நடிப்பில் கமல்ஹாசனை பார்த்து பிரமித்து இருக்கிறேன். அது போல வாழ்க்கையில் என்னை பிரமிக்க வைத்தவர் சீமான்தான். என் போன்றவர்கள் தமிழ் உணர்வோடு குரல் கொடுக்கதான் முடிந்தது. ஆனால் சீமான் களத்தில் இறங்கி போராடியவர். அவர் தனது அடுத்த படத்திற்கு வணங்காமண் என்று பெயர் வைக் வேண்டும். குரு சிஷ்யன் படத்தில் கதாநாயகன் சுந்தர் சி கதாபாத்திரத்திற்கு இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார். இதற்கு முன்பாகவே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வருடத்தில் துவங்கப்படும் படங்களில் வரும் ஹீரோ கேரக்டர்களுக்கெல்லாம் முத்துக்குமார் என்றே பெயர் வைக்க வேண்டும் என்று. ஆனால் அது, அன்றோடு முடிந்து போன தீர்மானம் ஆகிவிட்ட சூழலில் சத்யராஜின் நினைவூட்டல், இந்த படத்திலாவது சாத்தியமாகும் என்பது மட்டும் நிச்சயம். ஏனென்றால் சுந்தர் சி யோடு இணைந்து இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் புரட்சி தமிழன்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.