மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நடிகை தேதி கொடுக்க திகைக்க வைத்த டைரக்டர்!

சுனைனா, இப்போது 'கேர் ஆஃப் பரத்' ஆகிவிட்டார். தமிழ்சினிமாவில் குறுகிய காலத்தில் சந்து பொந்தெல்லாம் ரீச் ஆனது இவரது சாதனை என்றால், சகட்டு மேனிக்கு கிசுகிசுவில் சிக்கியது இன்னொரு சோதனை! நகுலுக்கும் இவருக்கும் லவ்வோ லவ்வு என்று கூவியபடியே இருந்தன பத்திரிகைகள். இவய்ங்க வாய அடைக்க ஒரே வழி, இனி கொஞ்ச நாளைக்கு சேர்ந்து நடிக்காமல் தனித்தனியா நடிக்கறதுதான். நகுல் சொன்ன இந்த ஐடியாவுக்கு சம்மதம் தெரிவித்த சுனைனா, பரத்துடன் திருத்தணி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

ஷேர் ஆட்டோவுக்கு கால் கடுக்க காத்திருக்கிற மாதிரி, இந்த படத்தின் கால்ஷீட்டுகளை வைத்துக் கொண்டு காலரை மாதங்களாக காத்திருந்தாராம் சுனைனா. "திருத்தணியில் பரத்துடன் ஜோடி சேர்றீங்க" என்ற உத்தரவாதத்தை கொடுத்துவிட்ட பேரரசு, "தேதியை மட்டும் இப்போ சொல்ல மாட்டேன். எல்லாம் கூடி வந்தபின் சொல்றேன்" என்று சொல்லிவிட்டாராம். இடையில் வந்த படங்களையெல்லாம் பரத் புராஜக்டுக்காக தள்ளி வைத்துக் கொண்டே வந்தாராம் சுனைனா.

முதலில் சொந்தப்படம் என்றும், பிறகு ஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் எடுக்கலாம் என்றும் வெவ்வேறு முடிவுகளில் இருந்த பேரரசு தற்போது புதிய தயாரிப்பாளர் ஒருவருடன் திருத்தணியை உருவாக்க போகிறார். சுனைனாவுக்கும் முறையாக சில தேதிகளை குறித்து கொடுத்தாராம். பொதுவாக டைரக்டர்கள் கேட்கும் தேதிகள் இருந்தால் கொடுப்பதுதான் நடிகைகளின் வழக்கம். ஆனால், "இந்த தேதியெல்லாம் இருந்தால்தான் நீங்க ஹீரோயின். இல்லேன்னா, யாருகிட்ட இந்த தேதி இருக்கோ, அவங்கதான் ஹீரோயின்" என்று கூறிவிட்டாராம் பேரரசு.

இதற்காகதான் வேறு படங்களை கூட ஒப்புக் கொள்ளாமல் காத்திருந்தாராம் சுனைனா.

சின்ன தளபதின்னா சும்மாவா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
  Blogger Comment
  Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

 1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

  இவன்
  உலவு.காம்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.