மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினியுடன் புகைப்படம் நடிகைகள் தள்ளுமுள்ளு

நிஜமானாலும் நிழலானாலும் ‘ஆட்டோகிராப்’ சமாச்சாரத்திற்கு தனி கிக் தான்! 80 களில் நடித்த ஹீரோ ஹீரோயின்கள் ஒன்று சேர்ந்து ஒரு விருந்தில் கலந்து கொண்டால் எப்படியிருக்கும்? தென்னக திரைவானில் மட்டுமல்ல, வடக்கிலேயும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீதேவி போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் வந்தவர்கள் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும்தான்.

நதியா, ராதிகா, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், லிசி, அம்பிகா, ராதா தெலுங்கு கன்னடத்திலிருந்து பார்வதி உள்ளிட்ட முக்கிய முன்னாள் ஹீரோயின்களும், பிரபு, கார்த்திக், மோகன், பிரதாப்போத்தன், சுமன், சுரேஷ், பானுசந்தர், உள்ளிட்ட ஹீரோக்களும் கலந்து கொண்டார்கள். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் மனைவியுடன் வந்திருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இங்கேயும் ஒரே தள்ளுமுள்ளு.

சற்று தாமதமாக வந்த ரஜினியை அரங்கமே அதிரும்படி உற்சாக கைதட்டி வரவேற்றார்கள் அனைவரும். எல்லாருடனும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார் ரஜினி. தன்னுடன் நடித்த ஒவ்வொரு ஹீரோயின்களையும் அழைத்து அவர்களிடம் குடும்பம் குழந்தைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தவர், எல்லாருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்பு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது. அதை வெட்டியது நம்ம சூப்பர் ஸ்டார்தான். தனது கையாலேயே எல்லாருக்கும் கேக் ஊட்டிவிட்டார் ரஜினி.

இத்தனை பெரிய கோலாகல விழா ‘கொண்டாட்டம்’ இல்லாமலா முடியும்? பிரதாப்போத்தனின் ஃபேஸ்புக்குடன் தொடர்புள்ளவர்கள் அங்கே போய் பார்த்தால் தெரியும், அத்தனை கொண்டாட்டமும் எத்தனை நிதானத்தோடு நடந்தது என்று!

MORE PHOTOS
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.