
தான் இயக்கிய வான்ட்டட் படத்தின் முதல் காட்சியை பார்க்க மும்பைக்கு போயிருந்தார் பிரபுதேவா. கூடவே நயன்தாராவும். பிரிமியர் ஷோவில் எல்லாரும் வந்திருக்கும் போது நயன்தாராவும் இருந்திருந்தால் சிக்கல் இல்லை. ஆனால் இது பிரிமியர் இல்லை. தியேட்டர் ஷோ. அங்குதான் ஜோடியாக போனார்கள் இருவரும். இருவரையும் வழி மறித்துக் கொண்ட மீடியா, உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்று கேள்வி எழுப்ப, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்தார் நயன்தாரா.
ஆனால் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெலுங்கு, மற்றும் இந்தி படவுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள். இப்போதிருக்கும் சூழலில் அது சாத்தியமா? பிரபுதேவா முறைப்படி விவாகரத்து வாங்கிய பிறகுதானே திருமணம் செய்து கொள்ள முடியும்? இப்படி ஏராளமான கேள்விகள். இந்த விவகாரத்தில் பிரபுதேவாவுக்கு ஆதரவாக பலரும், அவரது மனைவி ரமலத் என்கிற லதாவுக்கு ஆதரவாக சிலரும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த காதல் கல்யாணத்தில் முடியுமா? அல்லது பாதியிலேயே புட்டுக் கொள்ளுமா என்று தெரியும்.
பார்க்கலாம்...
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.