மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> யுவன் பண்றது சரியா? சொல்லத்துடிக்கும் சோனியா

மனசாட்சி வேணாமாய்யா மனுஷனுக்கு? இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச அந்த பொண்ணு, இப்போ தனியா இருக்கு. சண்டை போட்டு பிரிஞ்சிருந்த ஆளுங்க ரெண்டு பேரும் ஒண்ணா சுத்த ஆரம்பிச்சிட்டாங்க. சேர்த்து வச்சாரே, அவருக்காக ஒரு வார்த்தை நாம பேசலாமேன்னு நினைச்சாரா அந்தாளு? இப்படி கூடி கூடி குமைகிறார்கள் யுவன் சங்கர் ஏரியாவில்!

என்னவாம்? யுவனுக்கும் செல்வராகவனுக்கும் பண விவகாரத்தில் முட்டிக் கொள்ள, போதும் இந்த பிரண்ட்ஷிப் என்று ஒதுங்கிக் கொண்டார் யுவன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று செல்வா சொன்னாலும், நாங்கள் பிரிந்தது நிஜம்தான் என்று போட்டு உடைத்தார் யுவன். மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு கூட, இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறி வந்தார். இப்படிப்பட்ட உடைசலை ஒரே போனில் சரி பண்ணியவர் செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகவர்வால்தான்.

பேசாமலே இருந்த இருவரையும் பேச வைத்ததுடன், ஆயிரத்தில் ஒருவன் பட விழாவுக்கு கட்டாயமாக யுவனை வரவழைத்தார். அன்று இரவு நடந்த நட்சத்திர விடுதி பார்ட்டியில் இருவரையும் மனம் விட்டு பேச வைத்ததும் சோனியாதானாம். இப்போதெல்லாம் செல்வாவை தேடி தினமும் சென்று விடுகிறாராம் யுவன். மீண்டும் இருவரது காம்பினேஷனில் படங்கள் வெளிவரப் போவதாகவும் கிசுகிசுப்புகள். இந்த நேரத்தில்தான் சோனியாவுக்காக ஒரு வார்த்தை கூட செல்வாவிடம் பேசவில்லையே என்று யுவன் மீது வருத்தம் காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

காதிலே விழுதா யுவன்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.