மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ருதியை பாராட்டிய ஜெயலலிதா!

நாலாபுறத்திலிருந்து பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது ஸ்ருதிக்கு. இவருக்கு அமைந்த முதல் படமான உன்னைப்போல் ஒருவன் பாடல்கள் மூலம் தன்னை புலிக்கு பிறந்த புலி என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ருதி. இசைஞானி இளையராஜாவும், மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனும் இவரை ஆசிர்வதித்தார்களாம். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளும் முன்பாகவே இன்னொரு சந்தோஷம் ஸ்ருதிக்கு. அது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து வந்த தொலைபேசி. இந்த படத்தை பார்த்து பின்னணி இசைக்காக பாராட்டினாரா, அல்லது பாடல்களை கேட்டு அசந்து போய் அழைத்தாரா, தெரியவில்லை. ஆனால், தொலைபேசியில் தனது மனப்பூர்வமான பாராட்டுகளை ஸ்ருதிக்கு தெரிவித்தாராம்.

இசை துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று அவர் மனப்பூர்வமாக பாராட்டியதாக குறிப்பிடுகிறார் ஸ்ருதி. அவருக்கு தொடர்ந்து கிடைத்து வரும் இந்த பாராட்டுகள் ஸ்ருதியின் நடிப்பாசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் வைக்கக் கூடும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கிறது. ஆனாலும், பாலிவுட்டிலிருந்து வருகிற அழைப்புகளையும் அக்கறையாக பரிசீலித்து வருகிறாராம் ஸ்ருதி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.