இன்றும் எவர்கிரீன் ஹீரோ என்றால் அது, எம்.ஜி.ஆர். தான். தமிழகத்தின் பத்து இடங்களிலாவது இவரது படங்கள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். நல்ல கலெக்சனுடன் என்பது முக்கியமான விஷயம்.ஒரு நடிகரை மாடலாக வைத்து உருவாகும் முதல் அனிமேஷன் படம் சுல்தான் தி வாரியர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு. முதலில் தொடங்கப்பட்டது ரஜினியின் சுல்தான் தி வாரியர் என்றாலும், வெளிவரப் போவது, எம்.ஜி.ஆரை மாடலாக வைத்து உருவாகியிருக்கும் புரட்சித் தலைவர். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், உண்மை அதுதான்.
2007 ஆம் ஆண்டு சிறந்த அனிமேஷன் படத்துக்கான தேசிய விருதை வென்ற படம், எல்லாமே நாங்கதான். இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கிய டீம், புரட்சித் தலைவர் என்ற பெயரில் எம்.ஜி.ஆரை மாடலாக்கி ஒரு படத்தை உருவாக்கி வருகிறது. இதில் வரும் எம்.ஜி.ஆர். நிஜ எம்.ஜி.ஆரைப் போல பாட்டு பாடுகிறார், சண்டை போடுகிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் உண்டு, சரோஜாதேவி.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்தியது போன்ற காஸ்ட்யூம்தான் இந்த அனிமேஷன் எம்.ஜி.ஆருக்கும். அசப்பில் சுல்தான் தி வாரியர் ரஜினி போலவே இருக்கிறார். சுல்தான் தி வாரியர் திரைக்கு வருமுன் எம்.ஜி.ஆரின் புரட்சித் தலைவரை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.