சரித்திரத்துக்கும் அபிஷேக் பச்சனுக்கும் அவ்வளவு ராசியில்லை. ஹிருத்திக் ரோஷனின் சரித்திரப் படங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு அபிஷேக்கின் சரித்திரப் படம் வெற்றி பெறவில்லை. விரைவில் இந்த தீர்ப்பு மாற்றி எழுதப்படலாம். காரணம் அபிஷேக்கை வைத்து அடுத்த சரித்திரப் படத்தை எடுப்பவர், அஷுதோஷ் கோவாரிகர்.
அஷுதோஷ் கோவாரிகர் அடுத்து கலீன் ஹம் ஜி ஜான் ஸே என்ற படத்தை இயக்குகிறார். இதுவொரு சரித்திரப் படம். பிரதான வேடத்தில் அபிஷேக் நடிக்கிறார். ஹீரோயினாக நடிப்பவர் அசின்.
கஜினி படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான அசின் கஜினிக்குப் பிறகு ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்தார். லண்டன் ட்ரீம்ஸ் என்ற அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அஷுதோஷ் அசினிடம் தனது புதிய படத்துக்கு கால்ஷீட் கேட்க மறுக்காமல் உடனடியாக கொடுத்திருக்கிறார். இதற்கு காரணங்கள் இரண்டு.
ஒன்று படத்தை இயக்குகிறவர் அஷுதோஷ் கோவாரிகர். இரண்டு, உடன் நடிப்பவர் அபிஷேக் பச்சன். பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கிறார்கள், வாய்ப்பு கிடைக்காத மற்ற நடிகைகள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.