யோகி படத்துக்குப் பிறகு நடிப்பதில்லை, கண்ணபிரான் படத்தை இயக்கப் போகிறேன் என தெளிவாகக் கூறியிருக்கிறார் அமீர். ஆனாலும், அவரைச் சிலர் விடுவதாயில்லை. கண்டிப்பாக நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்கள்.
அந்த சிலர் வேறு யாருமில்லை, கண்ணபிரான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜெயம் ரவியின் குடும்பத்தினர்.
தனது யோகி படத்தை ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகனுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் அமீர். படத்தைப் பார்த்து பிரமித்ததைவிட, அமீரின் நடிப்பைப் பார்த்து அசந்து போயிருக்கிறார் மோகன்.
கண்ணபிரானில் நீங்க அவசியம் நடிக்கணும் என அமீரிடம் ஆஃபர் வைத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அண்ணன் ராஜாவும், கண்டிப்பாக நடிங்க என கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்ணபிரானில் அமீர் நடிப்பதற்கு தோதான கதாபாத்திரம் ஒன்றும் வருகிறது. இந்து கோயில்களுக்கு தேர் பழுது பார்த்து கொடுக்கும் முஸ்லிம் கதாபாத்திரம். அனேகமாக இந்த வேடத்தில் அமீர் நடிக்ககூடும் என்கிறார்கள்.
நடிப்பு என்பது போதை. அதிலிருந்து அவ்வளவு எளிதில் மீள முடியாது. அதற்கு இன்னொரு உதாரணமாகியிருக்கிறார் அமீர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.