படம் முடிந்துவிட்டது. படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் ஆவலாக உள்ளனர். ஆனால், படம் எப்போது வெளிவரும் என்று யாருக்கும் தெரியாது. ஏன்?
கண்டேன் காதலை படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பது சன் பிக்சர்ஸ் ஆயிற்றே. அவர்களுக்கு எப்போது சவுகரியப்படுகிறதோ அப்போதுதான் படம் திரைக்கு வரும்.
இந்தியில் வெளியான ஜப் வி மெட் படத்தின் ரீமேக்கான இதனை கண்ணன் இயக்கியிருக்கிறார். இவர் ஜெயம் கொண்டான் படத்தை இயக்கியவர். பரத், தமன்னா நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் வாங்கிய பிறகு ஒரு கலர்ஃபுல் பாடலை லேட்டஸ்டாக சேர்த்துள்ளனர்.
சமீபத்தில் இது சென்சார் குழு உறுப்பினர்களுக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதாவது படத்தை குடும்பத்தோடு பார்க்கலாமாம்.
என்ன, கண்டேன் காதலை பார்க்கத் தயாராகிட்டீங்களா?

பரத் படமா? காதலுக்கு பிறகு எதுவுமே பாத்தது இல்ல. அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணுவேன்
ReplyDelete