மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யின் புதிய வில்லன்

வில்லன் பவர்புல்லாக இருந்தால் மட்டுமே ஹீரோயிசம் தூக்கலாக‌த் தெ‌ரியும். எம்.ஜி.ஆ‌ரின் ஹீரோ இமேஜுக்கு மறைமுக காரணம் நம்பியா‌ரின் வில்லத்தனம் என்றால் மறுக்க முடியுமா? ஒரு படத்தின் வில்லனை முடிவு செய்தாலே பாதி வேலை முடிந்த மாதி‌ரி.

அந்தவகையில் சுறாவில் விஜய்யின் வில்லன் யார் என்பதை முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ரா‌ஜ்குமார்.

சமீபத்தில் ஆந்திராவை கலக்கிய படம், ராம் சரண் தேஜா நடித்த மஹாதீரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர், தேவ் கில். இவரை சுறாவில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவரே சுறாவில் மெயின் வில்லன், விஜய்யுடன் மோதப் போகிறவர்.

கேரளாவின் ஆலப்புழையில் முதல் ஷெட்யூலை முடித்தவர்கள் இரண்டாவது ஷெட்யூலுக்காக சென்னை வந்துள்ளனர். பின்னி மில்லில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறலாம் என்பது யூனிட்டிலிருந்து கசிந்திருக்கும் செய்தி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.